Home
Mobile

பொளந்து கட்டுது விற்பனை.. பட்ஜெட்ல 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி (Infinix GT 30 5G) போனின் விற்பனை தொடங்கிவிட்டது. ரூ.1,500 பேங்க் டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல், இலவச கேமிங் கிட் கிடைப்பதால், விற்பனை சக்கைப்போடு போடுகிறது. அமோலெட் டிஸ்பிளே, 64 எம்பி கேமரா, 5500mAh பேட்டரி, 45W சார்ஜிங் போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி போனின் விலை விவரங்கள் மற்றும் பீச்சர்கள் இதோ.

இந்திய மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.19,499ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் ரூ.1,500 பேங்க் டிஸ்கவுண்ட் வருகிறது. இதை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.17,999 ஆரம்ப விலையில் இந்த மாடலை வாங்கி கொள்ளலாம்.

பொளந்து கட்டுது விற்பனை.. பட்ஜெட்ல 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே!

இதுபோக ரூ.2,999 மதிப்பிலான ஜிடி கேமிங் கிட் (GT Gaming Kit) இலவசமாக கிடைக்கிறது. இதில் மேக்னட்டிக் கூலிங் ஃபேன் மற்றும் ஜிடி கேஸ் கிடைக்கிறது. ஆகவே, கஸ்டைமசபிள் கேமிங் டிரிகர்கள் கிடைப்பதால், இந்திய கேமிங் ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேபோல விசி கூலிங் சிஸ்டம், பேக் பேனல் எல்இடி லைட்ஸ் வருகிறது.

இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி அம்சங்கள் (Infinix GT 30 5G Specifications): இந்த டெக்னோ போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் மட்டுமல்லாமல், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78 இன்ச் (1224 x 2720 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் பெற்று கொள்ளலாம்.

அதேபோல 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2304Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. கேமிங் பீச்சர்களுடன் எக்ஸ்ஓஎஸ் 15 (XOS 15) கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Octa Core MediaTek Dimensity 7300) சிப்செட்டை கொடுக்கிறது.

இந்த இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி போனில் 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயர் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. 13 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து இருக்கிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சார் கிடைக்கிறது. 90FPS பிஜிஎம்ஐ (BGMI) கேமிங் அவுட்புட் கொடுக்கிறது.

அதேபோல 3டி வேப்பர் சேம்பர் கூலிங், எக்ஸ்பூஸ்ட் ஏஐ, எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டோர் மற்றும் 6 ஆக்சிஸ் கைரோஸ்கோப் போன்ற கேமிங்குக்கு தேவையான பீச்சர்களையும் இது கொடுக்கிறது. ஜிடி டிரிகர் மூலம் கேமிங் கன்ட்ரோல்களும் கிடைக்கின்றன. பேட்டரியும் கேமிங்குக்கு ஏற்ப இருக்கிறது. ஃபைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி கிடைக்கிறது.

இதுபோக 45W ஃபாஸ்ட் சார்ஜிங் பெற்று கொள்ளலாம். ஆகவே, பேட்டரி ஹீட் கன்ட்ரோல் கிடைக்கும். ஆடியோவை பார்க்கையில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. கேமிங் பிரியர்கள் விரும்பும்படி சைபர் மெச்சா டிசைனில் பிளேடு ஒயிட், சைபர் ப்ளூ மற்றும் பல்ஸ் கிரீன் ஆகிய கலர்களில் கிடைக்கிறது. பட்ஜெட்டில் கிடைக்கும் கேமிங் மாடலாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix GT 30 5G With 64MP Camera Available For Purchase in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X