மார்கெட் காலி.. பட்ஜெட்ல 64MP கேமரா.. 5500mAh பேட்டரி.. BYBASS சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாக இருக்கும் இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி (Infinix GT 30 5G) போனின் கேமரா, பேட்டரி மற்றும் ஓஎஸ் அப்டேட் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. சோனி சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா, ஃபைபாஸ் சார்ஜிங்குடன் 5500mAh பேட்டரி, 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்க இருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி போனில் இதுவரை உறுதி செய்யப்பட்ட பீச்சர்களை பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், டிஸ்பிளே, சிப்செட், டிசைன், கலர் போன்ற விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இப்போது, கேமரா, பேட்டரி மற்றும் ஓஎஸ் அப்டேட் பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பீச்சர்களை முதலில் பார்த்துவிடுவோம். மற்ற பீச்சர்களை அதன்பிறகு பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி அம்சங்கள் (Infinix GT 30 5G Specifications): இந்த போனில் 64 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டுயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சார் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்க இருக்கிறது.
13 எம்பி செல்பீ ஷூட்டர் வர இருக்கிறது. ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ எக்ஸ்டென்டர் (AI Extender) மற்றும் ஏஐ கட்அவுட் (AI Cutout) போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி போனில் 5500mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரிக்கு பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் கிடைக்க இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு எக்ஸ்ஓஎஸ் 15 (XOS 15) வருகிறது. 2 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், டூயல் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள், 3டி வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் (3D Vapor Chamber Cooling System) வர இருக்கிறது.

இப்போது, ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். சைபர் மெச்சா டிசைன் மற்றும் பேக் பேனலில் மெச்சா லைட்ஸ் (Mecha Lights) கொடுக்கும்படி பல்ஸ் கிரீன் (Pulse Green), சைபர் ப்ளூ (Cyber Blue) மற்றும் பிளேட் ஒயிட் (Blade White) ஆகிய மூன்று கலர்கள் வெளியாக இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிலாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கிடைக்கிறது.
1.5K ரெசொலூஷன் மற்றும் 90FPS கேமிங் ரேட் கொண்ட 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்க இருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் எஓஸ்சி (MediaTek Dimensity 7400 4nm SoC) சிப்செட் கிடைக்கிறது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் வெளியாக இருக்கிறது. விர்ச்சுவல் ரேம் மற்றும் எக்ஸ்பூஸ்ட் டெக்னாலஜி கிடைக்க இருக்கிறது. எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார், கேமிங் ஷோல்டர் ட்ரிகர்கள் கிடைக்க இருக்கின்றன. ரூ.20,000 மற்றும் ரூ.22,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








