Home
Mobile

ஆர்டர் அடிச்சு நொறுக்குறாங்க..108MP கேமரா.. 45W சார்ஜிங்.. புதிய Infinix போன் அறிமுகம்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ (Infinix GT 20 Pro) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 20 Pro specifications): அதாவது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது வெளிவந்துள்ளது இந்த போன். 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2304Hz பிடபுள்யூஎம் டிம்மிங் (2304Hz PWM Dimmin), பிக்சல்ஒர்க் எக்ஸ்5 டர்போ கேமிங் டிஸ்பிளே சிப் (Pixelworks X5 Turbo Gaming Display Chip) உள்ளிட்ட பல டிஸ்பிளே பல டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளது.

ஆர்டர் அடிச்சு நொறுக்குறாங்க..புதிய Infinix போன் அறிமுகம்.. எந்த மாடல்

3.1ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்டிமேட் 5ஜி 4என்எம் (3.1GHz Octa Core MediaTek Dimensity 8200 Ultimate 5G 4nm) பிராசஸர் உடன் வெளிவந்துள்ளது இந்த போன். அதேபோல் மாலி-ஜி610 எம்சி6 ஜிபியு (Mali-G610 MC6 GPU) ஆதரவும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

108எம்பி சாம்சங் எச்எம்6 சென்சார் (Samsung HM6 sensor)+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக HiOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14 ) இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது புதிய இன்பினிக்ஸ் போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் (In-display fingerprint scanner)ஆதரவு இதில் உள்ளது. மேலும் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ ( (USB Type-C audio), ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர் (Stereo Dual Speaker), ஜேபிஎல் (JBL) சவுண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (45W fast charging) வசதியும் கொண்டுள்ளது இந்த போன். எனவே சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.

ஆர்டர் அடிச்சு நொறுக்குறாங்க..புதிய Infinix போன் அறிமுகம்.. எந்த மாடல்

5ஜி (5G), வைஃபை 6 ( Wi-Fi 6), புளூடூத் 5.3 (Bluetooth 5.3), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் மெக்கா ப்ளூ (Mecha Blue), மெக்கா ஆரஞ்சு (Mecha Orange), மெக்கா சில்வர் (Mecha Silver) நிறங்களில் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போனை வாங்க முடியும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போனின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.26,999-ஆக உள்ளது. வரும் மே 28-ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனை வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
infinix gt 20 pro with 12gb ram 108mp camera sale from may 28 check specifications price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X