Home
Mobile

மார்க்கெட்டே அதிர போகுது.. 45W சார்ஜிங்.. 12GB ரேம்.. பட்ஜெட் விலையில் புது Infinix போன் ரெடி.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அடுத்து இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ எனும் போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போனின் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ரேம் மற்றும் பல்வேறு முக்கிய விவரக்குறிப்புகள் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மார்க்கெட்டே அதிர போகுது.. பட்ஜெட் விலையில் புது Infinix போன் ரெடி..

இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 20 Pro specifications): எல்இடி லைட் ஆதரவு, சைபர் மெக்கா டிசைன், ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

மார்க்கெட்டே அதிர போகுது.. பட்ஜெட் விலையில் புது Infinix போன் ரெடி..

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட் (MediaTek Dimensity 8200 SoC) வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் மாலி ஜி68 எம்சி4 ஜிபியு (Mali G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். எனவே கேமிங் பயனர்கள் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போனை நம்பி வாங்கலாம்.

ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, 108எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.

மார்க்கெட்டே அதிர போகுது.. பட்ஜெட் விலையில் புது Infinix போன் ரெடி..

4900எம்ஏஎச் பேட்டரி (4900mAh battery) வசதியுடன் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே விரைவாக இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, வைஃபை 6, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix GT 20 Pro spotted on FCC certification site: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X