Home
Mobile

அவசரப்பட்டு புது போன் ஆர்டர் போட்றாதீங்க.. 108எம்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

கடந்த மாதம் இறுதியில் புதிய இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன் சவுதி அரேபியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக சைபர் மெக்கா டிசைன், எக்ஸ்5 டர்போ கேமிங் டிஸ்பிளே சிப், 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த புதிய இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன் ஆனது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இன்பினிக்ஸ் இந்தியா புதிய ஜிடி போன் ஒன்று விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று டீசர் வெளியிட்டுள்ளது. அதாவது இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன் தான் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அவசரப்பட்டு புது போன் ஆர்டர் போட்றாதீங்க.. வருகிறது Infinix 5ஜி போன்..

அதேபோல் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தான் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 20 Pro specifications): ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்டிமேட் 5ஜி 4என்எம் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது அசத்தலான இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ. மேலும் கேமிங் பயனர்களுக்குத் தகுந்தபடி மாலி-ஜி610 எம்சி6 ஜிபியு (Mali-G610 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் உள்ளது.

இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன் ஆனது 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (AMOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன். 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2304Hz பிடபுள்யூஎம் டிம்மிங் (2304Hz PWM Dimmin), பிக்சல்ஒர்க் எக்ஸ்5 டர்போ கேமிங் டிஸ்பிளே சிப் (Pixelworks X5 Turbo Gaming Display Chip) போன்ற அம்சங்கள் இந்த போனின் டிஸ்பிளேவில் உள்ளன.

இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் 108எம்பி சாம்சங் எச்எம்6 சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

HiOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது புதிய இன்பினிக்ஸ் போன். மேலும் எல்இடி ஆதரவு கொண்ட பேக் பேனல், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு, ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர், ஜேபிஎல் சவுண்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

அவசரப்பட்டு புது போன் ஆர்டர் போட்றாதீங்க.. வருகிறது Infinix 5ஜி போன்..

இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.குறிப்பாக சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும். 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.3, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

இந்தியாவில் மெக்கா ப்ளூ (Mecha Blue), மெக்கா ஆரஞ்சு (Mecha Orange), மெக்கா சில்வர் (Mecha Silver) நிறங்களில் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ விற்பனைக்கு வரும். பின்பு ரூ.29,999 விலையில் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix GT 20 Pro phone will be available on Flipkart in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X