Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 256ஜிபி மெமரி.. AMOLED டிஸ்பிளே.. வரப்போகுது புதிய இன்பினிக்ஸ் போன்..

கடந்த ஆண்டு இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் சைபர் மெக்கா (Cyber Mecha) டிசைன், 108எம்பி கேமரா, 45 வாட்ஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்தது.

இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போனை தொடர்ந்து இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். குறிப்பாக இந்தோனேசியாவில் SDPPI சான்றிதழைப் பெற்றுள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே அங்கு வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. வரப்போகுது புதிய இன்பினிக்ஸ் போன்..

குறிப்பாக இந்தோனேசியாவில் SDPPI சான்றிதழ் தளத்தில் X6871 மாடல் நம்பர் உடன் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் முதலில் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

குறிப்பாக இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ (Infinix GT 20 Pro) ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைனில் கசிந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 20 Pro specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட் (MediaTek Dimensity 8200 SoC) வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த போனில் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி68 எம்சி4 ஜிபியு (Mali G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

8ஜபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. வரப்போகுது புதிய இன்பினிக்ஸ் போன்..

இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 4900எம்ஏஎச் பேட்டரி (4900mAh battery) வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். பின்பு இந்த ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display), ட்ரிபிள் ரியர் கேமராகள், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் உள்ளன. மேலும் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix GT 20 Pro Phone Gets SDPPI Certification: May Launch Soon: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X