Home
Mobile

அசரவைக்கும் இன்பினிக்ஸ்.. 108MP கேமரா.. கேமிங் டிஸ்பிளே சிப்.. 45W சார்ஜிங்.. 256GB மெமரி.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்5 டர்போ கேமிங் டிஸ்பிளே சிப், 108எம்பி கேமரா, 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் புதிய இன்பினிக்ஸ் போன் வெளிவந்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 20 Pro specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2304Hz பிடபுள்யூஎம் டிம்மிங் (2304Hz PWM Dimmin), பிக்சல்ஒர்க் எக்ஸ்5 டர்போ கேமிங் டிஸ்பிளே சிப் (Pixelworks X5 Turbo Gaming Display Chip)உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

அசரவைக்கும் இன்பினிக்ஸ்.. 108MP கேமரா.. 5W சார்ஜிங்.. எந்த மாடல்?

3.1ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்டிமேட் 5ஜி 4என்எம் பிராசஸர் உடன் இந்த அசத்தலான இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி-ஜி610 எம்சி6 ஜிபியு (Mali-G610 MC6 GPU) ஆதரவும் இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனில் நம்பி வாங்கலாம்

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

அசரவைக்கும் இன்பினிக்ஸ்.. 108MP கேமரா.. 5W சார்ஜிங்.. எந்த மாடல்?

108எம்பி சாம்சங் எச்எம்6 சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக HiOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது புதிய இன்பினிக்ஸ் போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ. மேலும் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர், ஜேபிஎல் சவுண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஆனது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தபோன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.

அசரவைக்கும் இன்பினிக்ஸ்.. 108MP கேமரா.. 5W சார்ஜிங்.. எந்த மாடல்?

5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.3, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் மெக்கா ப்ளூ (Mecha Blue), மெக்கா ஆரஞ்சு (Mecha Orange), மெக்கா சில்வர் (Mecha Silver) நிறங்களில் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக

தற்போது இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன் ஆனது சவுதி அரேபியாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஆரம்ப விலை SAR 1,299 (இந்திய மதிப்பில் ரூ.28,885) ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் மே 1-ம் தேதி இந்த போன் சவுதி அரேபியாவில் விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
Infinix GT 20 Pro launched: check specifications, price, sale date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X