அதிர போகுது ஆர்டர்.. ரூ.2000 தள்ளுபடி.. 108MP கேமரா.. 45W சார்ஜிங்.. விற்பனைக்கு வந்த Infinix போன்..
இன்பினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் புதிய இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த போன் இன்று முதல் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போனின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.26,999-ஆக உள்ளது. அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கும்.

எனவே ரூ.22,999 இருந்தால் போதும் இந்த புதிய இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்கிவிட முடியும். மேலும் இன்ஃபினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் உடன் ரூ.5,499 மதிப்புள்ள ஜிடி கேமிங் கிட் கிடைக்கும். இதில் மெக்கா கேஸ், கூலிங் ஃபேன் மற்றும் ஃபிங்கர் ஸ்லீவ்ஸ் போன்றவை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 20 Pro specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் யுஆழுடுநுனு டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2304Hz பிடபுள்யூஎம் டிம்மிங் (2304Hz PWM Dimmin), பிக்சல்ஒர்க் எக்ஸ்5 டர்போ கேமிங் டிஸ்பிளே சிப் (Pixelworks X5 Turbo Gaming Display Chip) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.

சக்திவாய்ந்த 3.1ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்டிமேட் 5ஜி 4என்எம் (3.1GHz Octa Core MediaTek Dimensity 8200 Ultimate 5G 4nm) சிப்செட் வசதி இந்த போனில் உள்ளது. மேலும் மாலி-ஜி610 எம்சி6 ஜிபியு (Mali-G610 MC6 GPU) ஆதரவும் இந்த போனில் உள்ளது.
குறிப்பாக 108எம்பி சாம்சங் எச்எம்6 சென்சார் (Samsung HM6 sensor)+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன் வெளிவந்துள்ளது.
HiOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது புதிய இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் (In-display fingerprint scanner), ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர் (Stereo Dual Speaker), ஜேபிஎல் (JBL) சவுண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.
5000எம்ஏஎச் பேட்டரிம் மற்றும் 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (45W fast charging) வசதியும் கொண்டுள்ளது இந்த போன். 5ஜி (5G), வைஃபை 6 ( Wi-Fi 6), புளூடூத் 5.3 (Bluetooth 5.3), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. பின்பு மெக்கா ப்ளூ (Mecha Blue), மெக்கா ஆரஞ்சு (Mecha Orange), மெக்கா சில்வர் (Mecha Silver) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
photo courtesy: fonearena


Click it and Unblock the Notifications








