Home
Mobile

மார்க்கெட்டே திணறப்போகுது.. 108MP கேமரா.. மே 21-ல் இந்தியாவுக்கு வரும் Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மற்றும் இன்பினிக்ஸ் ஜிடிபுக் லேப்டாப் சாதனங்களை வரும் மே 21-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனங்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும்.

இன்பினிக்ஸ் ஜிடிபுக் லேப்டாப் அம்சங்கள் (Infinix GTBook specifications): RGB லைட்டிங், RGB கீபோர்டு, சைபர் மெக்கா டிசைன், கூலிங் ஃபேன், RGB மேட், RGB மவுஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஜிடிபுக் லேப்டாப் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லூப்-லெட் இன்டர்ஃபேஸ் மற்றும் கேம் லைட்டிங் எஃபெக்ட்கள் இந்த லேப்டாப் மாடலில் உள்ளன.

மே 21-ல் இந்தியாவுக்கு வரும் Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ அம்சங்கள்( Infinix GT 20 Pro specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2304Hz பிடபுள்யூஎம் டிம்மிங் (2304Hz PWM Dimming), பிக்சல்ஒர்க் எக்ஸ்5 டர்போ கேமிங் டிஸ்பிளே சிப் (Pixelworks X5 Turbo Gaming Display Chip) போன்ற பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். அதேபோல் HiOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது புதிய இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

மே 21-ல் இந்தியாவுக்கு வரும் Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

108எம்பி சாம்சங் எச்எம்6 சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த போனின் உதவியுடன் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்டிமேட் (MediaTek Dimensity 8200 Ultimate) 5ஜி 4என்எம் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கேமிங் பயனர்களுக்குத் தகுந்தபடி மாலி-ஜி610 எம்சி6 ஜிபியு (Mali-G610 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

அதேபோல் எல்இடி ஆதரவு கொண்ட பேக் பேனல்இ இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு, ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர், ஜேபிஎல் சவுண்ட் உள்ளிட்ட போன்ற தனித்துவமான அம்சங்களுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

மே 21-ல் இந்தியாவுக்கு வரும் Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் இதை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இதில் உள்ளது.குறிப்பாக சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும். 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.3, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மெக்கா ப்ளூ (Mecha Blue), மெக்கா ஆரஞ்சு (Mecha Orange), மெக்கா சில்வர் (Mecha Silver) நிறங்களில் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன் அறிமுகமாகும்.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஆனது ரூ.23,000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இன்பினிக்ஸ் ஜிடிபுக் லேப்டாப் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த இரண்டு சாதனங்களும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix GT 20 Pro GTBook India Launch Date Revealed: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X