Nothing போன்கள் காலி.. அதே டிஸைன்.. ஆனால் நச்சென்ற அம்சங்கள்.. போட்டு தாக்கும் விலையில் புது Infinix மாடல்!
இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ (Infinix GT 10 Pro)ஸ்மார்டபோனை வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட நத்திங் போன் போலவே இருக்கும் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஆனது மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் அறிமுகமாகும்.
அதேபோல் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புற பேனல் ஆனது நிறம் மாறும் தன்மை கொண்டது. குறிப்பாக இந்த போனில் பின்புறம் எல்இடி லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. எனவே நோட்டிபிகேஷன், சார்ஜிங் நிலை மற்றும் கேம்கள் தொடங்கப்படுவதைப் பற்றி அறிவிப்பதற்காக இந்த போனின் பின்புறம் உள்ள எல்இடி லைட்டுகள் ஒளிரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.

குறிப்பாக 6.78 ஃபுல்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.
மீடியாடெக் டைமன்சிட்டி 8050 (MediaTek Dimensity 8050) சிப்செட் உடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற பயன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாகப் பயன்படும்.
12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன.
நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும் போன்களை தேடும் பயனர்கள் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போனை தேர்வு செய்வது நல்லது. அதாவது இந்த போன் 7000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவரும். பின்பு இதில் 160W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 260W ஃபாஸ்ட் சார்ஜிங் என்று 2 வேரியண்ட் இருக்கிறது. குறிப்பாக இந்த போனை 6 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்துகொள்ள முடியும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

நத்திங் போன்களை போல டிரான்ஸ்பரன்ட் டிசைனில் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் ரூ.30,000 விலையில் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








