Home
Mobile

எதிர்பார்க்கல.. சைபர் மெக்கா டிஸைன்.. 16GB ரேம்.. 108MP கேமரா.. இந்த கம்பனிகிட்ட இருந்து இப்படி ஒரு Phone-ஆ!

இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ (Infinix GT 10 Pro) ஸ்மார்டபோனின் டீசரை வெளியிட்டுள்ளது. எனவே இந்த போன் இந்தியாவிலும், உலக சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. குறிப்பாக இந்த போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் இந்த வாரம் இறுதியில் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக இதுவரை வெளிவந்த இன்பினிக்ஸ் போன்களை விட மிகவும் சக்திவாய்ந்த சிப்செட் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கல.. இந்த கம்பனிகிட்ட இருந்து இப்படி ஒரு Phone-ஆ!

டீசரில் வெளியான படங்களின் அடிப்படையில், சைபர் மெக்கா டிஸைன் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ. மேலும் சென்டர் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே, நிறம் மாறும் தன்மை கொண்ட பின்புற பேனல், ட்ரிபிள் ரியர் கேமரா,
3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற மேம்பட்ட வசதிகளை கொண்டு இந்த புதிய இன்பினிக்ஸ் போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போனில் பின்புறம் எல்இடி லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. எனவே நோட்டிபிகேஷன், சார்ஜிங் நிலை மற்றும் கேம்கள் தொடங்கப்படுவதைப் பற்றி அறிவிப்பதற்காக இந்த போனின் பின்புறம் உள்ள எல்இடி லைட்டுகள் ஒளிரும். அதாவது நத்திங் போன் போன்ற பல அசத்தலான வசதிகளுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன் வெளிவரும்.

இந்த புதிய இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8050 (MediaTek Dimensity 8050) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களுக்கு தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளதாக இன்பினிக்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.78 ஃபுல்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் போன்.

எதிர்பார்க்கல.. இந்த கம்பனிகிட்ட இருந்து இப்படி ஒரு Phone-ஆ!

108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது இந்த போன்.

முன்பு வெளியான தகவலின்படி 7000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன் அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியான தகவலின்படி 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் தான் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5ஜி ஆதரவு உள்ளிட்ட பல அட்டகாசமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ மாடல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix GT 10 Pro with 108MP Camera to Launch in India Soon: Teaser Out : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X