Home
Mobile

ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.20,990 பட்ஜெட்ல 108MP கேமரா.. 16GB ரேம்.. 1TB மெமரி.. மரண வெயிட்டிங் முடிஞ்சது!

இந்தியாவில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி ஒரு சில வாரங்களில் விற்று தீர்ந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ (Infinix GT 10 Pro) போன் மீண்டும் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் எங்கு கிடைக்கிறது? இப்போதைய விலை என்ன? உள்ளிட்ட விவரங்கள் இதோ.

இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 10 Pro Specifications): இந்த போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 8050 (MediaTek Dimensity 8050) சிப்செட் கொண்டுள்ளது. அதோடு எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) மற்றும் ஆர்ம் - மாலி ஜி77 எம்சி9 ஜிபியு (ARM Mali-G77 MC9 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ஆர்டர் பிச்சிக்கும்! ரூ.20990க்கு 108MP கேமரா.. 16GB ரேம்.. எந்த போன்?

இந்த இன்பினிக்ஸ் ப்ரோ போன் 6.67 இன்ச் (1080×2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, டிசிஐ - பி3 வைடு கலர் காமட் (DCI - P3 Wide Colour Gamut) மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. ஆகவே, 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. அதோடு குவாட் எல்இடி பிளாஷ் (Quad LED Flash) இடம் பெற்றுள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் மாடலில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது.

ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், 1 டிபி வரையில் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் முக்கிய அம்சமாக 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

மேலும், டிடிஎஸ் சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை - ரெஸ் ஆடியோ, 3.5மிமீ ஆடியோ ஜாக் போன்ற அம்சங்கள் வருகிறன்றன. இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), வை-பை 802 (Wi-Fi 802), என்எஃப்சி (NFC), எஃப்எம் ரோடியோ (FM Radio), ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்டவை இருக்கின்றன.

இந்த போன் மிராஜ் சில்வர் (Mirage Silver) மற்றும் சைபர் பிளாக் (Cyber Black) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வந்தது. வெறும் ரூ.19,999 விலையில் மார்கெட்டுக்கு வந்ததால், விற்பனையில் பின்னிப்பெடல் எடுத்தது.

இதனால், அடுத்த சில வாரங்களில் இந்த மாடல் விற்றுத் தீர்ந்தது. அதன்பின்பு, தற்காலிகமாக விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த போன் மீண்டும் எப்போது வெளியாகும் என்று இன்பினிக்ஸ் பிரியர்கள் வெகுவாக காத்திருக்க தொடங்கினர். இந்த சூழலில், இன்பினிக்ஸ் நிறுவனம், நாளை (செப்டம்பர் 8) முதல் அந்த போனின் விற்பனையை மீண்டும் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.

ஆனால், இந்த முறை, இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போனின் விலை சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, முன்பு ரூ.19,999 க்கு விற்பனை செய்யப்படுவந்த நிலையில், இப்போது, ரூ.20,999ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் அம்சங்களை பார்த்தால், இந்த விலை சரியானது போலவே இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Infinix GT 10 Pro With 108MP Camera Available on Flipkart From September 9 Price, Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X