Home
Mobile

தாறுமாறு விற்பனை.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. விட்டா முடிச்சிரும்!

நத்திங் போனின் விலைக்கு பாதிக்குப்பாதி பட்ஜெட் கூட நிர்ணயிக்கப்படாத இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனத்தின் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ (Infinix GT 10 Pro) போனின் விற்பனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தாறுமாறாக போய்க் கொண்டிருக்கிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

ரூ.20,000 பட்ஜெட்டை விட மலிவான விலையில் 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 5000mAh பேட்டரி, மாலி ஜி77 கிராபிக்ஸ் கார்டு, 108 எம்பி கேமரா என்று ஒட்டுமொத்த ஃப்ளாக்ஷிப் அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன் அறிமுகமானது. ப்ரீ-ஆர்டரே விண்ணை முட்டிய நிலையில், இன்று விற்பனை தொடங்கியிருக்கிறது.

தாறுமாறு விற்பனை.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 10 Pro Specifications): இந்த போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஆர்ம் - மாலி ஜி77 எம்சி9 (ARM Mali-G77 MC9) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8050 (MediaTek Dimensity 8050) சிப்செட் கொண்டுள்ளது. அதோடு எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் பிரம்மாண்ட அம்சமாக டிரிபிள் ரியர் கேமரா செட்டப் வருகிறது. 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. செல்பீ கேமராவை பொறுத்தவரை 32 எம்பியாக இருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது.

ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் விற்பனைக்கு வருகிறது. அதோடு 1 டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட 6.67 இன்ச் (1080×2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது.

இந்த டிஸ்பிளேவில் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசிஐ - பி3 வைடு கலர் காமட் (DCI-P3 Wide Colour Gamut) மற்றும் 1920Hz டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. மற்றொரு பிரம்மாண்ட அம்சமாக 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

அதேபோல டிடிஎஸ் சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், வயர்லெஸ் ஆடியோ, ப்ளூடூத் 5.2 மற்றும் வை-பை 6 கனெக்டிவிட்டி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், டைப் - சி சார்ஜிங் போர்ட் மற்றும் எஸ்டிகார்டு போர்ட், இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார், எஃப்எம் ரோடியோ, என்எஃப்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன.

இந்த போன் நத்திங் போனின் டிசைனைப் போலவே உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல கேமிங் பிரியர்களை கவரும் வகையில் சைபர்பங்க் (Cyberpunk) என்னும் ரோபோட்டிக் டிசைன் பேக் பேனல் கொண்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் போன் சைபர் மிராஜ் சில்வர் (Mirage Silver) மற்றும் பிளாக் (Cyber Black) ஆகிய 2 கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆகஸ்ட் 3ஆம் தேதி பிளிப்கார்ட்டில் ப்ரீ-ஆர்டர் தொடங்கி, மிகப்பெரும் வரவேற்பனை பெற்ற நிலையில், இன்று (ஆகஸ்ட் 10) முதல் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இவ்வளவு பிரம்மாண்ட அம்சங்கள் கொண்டிருந்தும் ரூ.19,999ஆக மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையிலும் ரூ.5000 ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

அதோடு ரூ.16,000க்கும் மேல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கொடுக்கப்படுகிறது. மேலும், முன்னணி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 6 மாதத்துக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகையும் இருக்கிறது. நத்திங் டிசைனில், நல்ல சிப்செட், பேட்டரி, கேமரா போன் வேண்டுமானால், இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix GT 10 Pro With 108MP Camera, 16GB RAM Sale Start in India Price Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X