இது தெரிஞ்சா அடிச்சு புடிச்சு வாங்குவாங்களே: சூப்பர் சலுகையுடன் விற்பனைக்கு வரும் Infinix ஜிடி 10 ப்ரோ.!
இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ (Infinix GT 10 Pro) ஸ்மார்டபோனை வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போனின் முன்பதிவு கூட ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனை முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு சிறப்பு சலுகை உள்ளது.
அதாவது வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு ப்ரோ கேமிங் கிட் (Pro Gaming Kit) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யுனிவர்சல் ஷோல்டர் ட்ரிகர் (Universal Shoulder Triggers), கேமிங் ஃபிங்கர் ஸ்லீவ் (Gaming Finger Sleeves), கார்பன் பாக்ஸ் (Carbon Box)போன்றவை இந்த கேமிங் கிட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000-விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.2000 உடனடி தள்ளுபடி மற்றும் ரூ.2000 மதிப்பிலான எக்சேன்ஜ் ஆஃபர் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட உள்ளது.
குறிப்பாக சைபர் மெக்கா டிஸைன் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ. மேலும் சென்டர் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே, நிறம் மாறும் தன்மை கொண்ட பின்புற பேனல், ட்ரிபிள் ரியர் கேமரா, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற மேம்பட்ட வசதிகளைக் கொண்டு இந்த புதிய இன்பினிக்ஸ் போன் வெளிவரும் . குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
அதேபோல் இன்பினிக்ஸ் 6.78 ஃபுல்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ. குறிப்பாக120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8050 (MediaTek Dimensity 8050) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும் இந்த சாதனம். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் போன் அறிமுகமாகும்.
12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக கேமிங் பயனர்களுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளதாக இன்பினிக்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது இந்த போன்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5ஜி ஆதரவு போன்ற பல அசத்தலான சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications








