மார்கெட்டே அதிரும்.. 26GB ரேம்.. 1TB மெமரி.. 7,000mAh பேட்டரி.. 260W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒரு போனை பற்றி கேட்டாலே அதிரும் என்று சொல்லக்கூடிய வகையில், 26ஜிபி ரேம், 1டிபி மெமரி, 7000mAh பேட்டரி, 260W ஃபாஸ்ட் சார்ஜிங், 108 எம்பி கேமரா என்று இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ (Infinix GT 10 Pro) போன் கொண்டிருக்கிறது.
இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் எந்த போனும் 24 ஜிபி ரேம் கொண்டு அறிமுகம் செய்யப்படவில்லை. ஏன்? உலகிலேயே 24 ஜிபி ரேம் கொண்ட முதல் போன் என்ற பெருமையை பெற்ற ரெட் மேஜிக் 8 எஸ் ப்ரோ போன் மற்ற நாடுகளில் விற்பனைக்கு வந்ததும், இதுவரை இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை.

ஆனால், இந்த போனையை தூக்கிச்சாப்பிடும் வகையில், இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனத்தின் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன், 26 ஜிபி ரேம் கொண்டு வெளியாக இருக்கிறது. இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அந்த போன் முதலில் இந்தியாவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போனின் கசிந்துள்ள அம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 10 Pro Specifications): இந்த போன் 6.78 ஃபுல்எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8050 (MediaTek Dimensity 8050) சிப்செட் வருகிறது. இதேடு எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. 108 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8 எம்பி மேக்ரோ கேமரா என்ற டிரிபிள் லேயர் பேக் கேமரா செட்டப் கொண்டிருக்கிறது.
32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என்று 2 வேரியண்ட் கொண்டுள்ளது. 1 டிபி வரை எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் பிரம்மாண்ட அம்சமாக 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் 160W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 260W ஃபாஸ்ட் சார்ஜிங் என்று 2 வேரியண்ட் இருக்கிறது. இவ்வளவு ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்டிருப்பதால், 6 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்துகொள்ள முடியும். அதுமட்டுமல்லால், நத்திங் போன்களை போல டிரான்ஸ்பரன்ட் டிசைனில் கண்களை தூக்கி சாப்பிடுகிறது.
இந்த போனின் போட்டோக்கள் ட்விட்டரில் வெளியாகி மிகப்பெரும் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த போனின் விலையை பொறுத்தவரையில் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 வரை விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.
முன்னதாக, உலகின் முதல் 24 ஜிபி ரேம் போன் என்று ரெட் மேஜிக் போன் பெற்ற பெயரை இந்த போன் முறியடிக்க இருக்கிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








