Home
Mobile

200எம்பி கேமரா மற்றும் 7.5 நிமிடங்களில் முழு சார்ஜ் ஆகும் வசதியுடன் புதிய 5ஜி போனை இறக்கிவிடும் Infinix.!

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ அம்சங்கள்: இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

7.5 நிமிடங்களில் முழு சார்ஜ்  5ஜி போனை இறக்கிவிடும் Infinix.!

விரைவில் அறிமுகமாகும் புதிய இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 9000 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் வெளிவரும்.

இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7.5 நிமிடங்களில் முழு சார்ஜ்  5ஜி போனை இறக்கிவிடும் Infinix.!

அதேபோல் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 200எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 260 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த போனை 7.5 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாஸ்ட் சார்ஜிங் வசதிக்குத் தகுந்தபடி சிறந்த பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளன.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக 200எம்பி கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி, தரமான சிப்செட் உள்ளதால் அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7.5 நிமிடங்களில் முழு சார்ஜ்  5ஜி போனை இறக்கிவிடும் Infinix.!

என்ன விலை? இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் சற்று உயர்வான விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போனில் உள்ளன. பின்பு விரைவில் இந்நிறுவனம் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix GT 10 Pro phone to launch soon with 260W fast charging and 200MP camera : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X