Home
Mobile

நாளைக்கு லான்ச் ஆகும் புதிய Infinix 5ஜி போன்.! நிறம் மாறும் பேனல்.. 100எம்பி கேமரா..நிறைய பேர் வெயிட்டிங்.

இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ (Infinix GT 10 Pro) எனும் புதிய போனை நாளை (ஆகஸ்ட் 3) அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்தியாவுக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக இந்த போனை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனின் முன்பதிவு கூட நாளை தான் தொடங்கும். அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்யும் முதல் 5000 பயனர்களுக்கு ப்ரோ கேமிங் கிட் (Pro Gaming Kit) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யுனிவர்சல் ஷோல்டர் ட்ரிகர் (Universal Shoulder Triggers), கேமிங் ஃபிங்கர் ஸ்லீவ் (Gaming Finger Sleeves), கார்பன் பாக்ஸ் (Carbon Box)போன்றவை இந்த கேமிங் கிட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைக்கு லான்ச் ஆகும் புதிய Infinix 5ஜி போன்.. நிறம் மாறும் பேனல்..

இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.20000 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.2000 உடனடி தள்ளுபடி மற்றும் ரூ.2000 மதிப்பிலான எக்சேன்ஜ் ஆஃபர் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த போனின் தரமான அம்சங்களை இப்போது பார்ப்போம்.

அதாவது சைபர் மெக்கா டிஸைன் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ. மேலும் சென்டர் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே, நிறம் மாறும் தன்மை கொண்ட பின்புற பேனல், ட்ரிபிள் ரியர் கேமரா, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற மேம்பட்ட வசதிகளைக் கொண்டு இந்த புதிய இன்பினிக்ஸ் போன் வெளிவரும் . குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

6.78 ஃபுல்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே தனித்துவமான டிஸ்பிளே அனுபவத்தைக் கொடுக்கும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 8050 (MediaTek Dimensity 8050) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த அட்டகாசமான சாதனம். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது.மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இதில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

நாளைக்கு லான்ச் ஆகும் புதிய Infinix 5ஜி போன்.. நிறம் மாறும் பேனல்..

108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5ஜி ஆதரவு போன்ற பல அசத்தலான சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix GT 10 Pro Phone Release Date Price Specifications:check full details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X