Home
Mobile

அனல் பறக்குது.. ப்ரீ-ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.17,999 விலை.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த போன்?

இந்திய மார்கெட்டே அதிரும்படி ரூ.17,999 விலையிலும், நத்திங் போனையே தூக்கி சாப்பிடும் டிசைனிலும் 16ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 108எம்பி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஜிடி10 ப்ரோ (Infinix GT 10 Pro) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அடுத்தடுத்து மலிவு விலை போன்களை களமிறக்கி தனி ரசிகர் பட்டாளத்தை இன்பினிக்ஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் போன்கள் ரூ.20,000 பட்ஜெட்டுக்கு மேல் இருப்பதில்லை. ஆனால், அவற்றின் அம்சங்கள் மிட்-ரேஞ்ச் போன்களில் இருப்பதை போல இருப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுவிடுகின்றன.

ரூ.17,999 விலை.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த போன்?

அந்த வரிசையில், நத்திங் போன் போன்ற பிரத்யேக டிசைனில் பிரம்மாண்ட அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட இன்பினிக்ஸ் ஜிடி10 ப்ரோ போன், கேட்டாலே வியக்கும் வகையில் கம்மியான பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு, பிளிப்கார்ட்டில் தள்ளுபடியும் எக்கச்சக்கமான கிடைக்கிறது. இந்த போனின் முழு அம்சங்கள், விலை மற்றும் சலுகை விவரங்கள் பின்வருமாறு.

இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 10 Pro Specifications): இந்த இன்பினிக்ஸ் போன் கேமிங் பிரியர்களை கவரும் விதமாக சைபர்பங்க் (Cyberpunk) டிசைன் பேக் பேனல் கொண்டுள்ளது. அதில், ஆர்க் இன்டர்பேஸ் எல்இடி லைட் இடம் பெற்றுள்ளது.

6.67 இன்ச் (1080×2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட், 1920Hz டிம்மிங் ஃபிரிகொன்சி, 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசிஐ - பி3 வைடு கலர் காமட் (DCI-P3 Wide Colour Gamut) சப்போர்ட் வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஜிடி சீரிஸ் போன்களுக்கு கொடுக்கப்படும் எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8050 (MediaTek Dimensity 8050) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஆர்ம் - மாலி ஜி77 எம்சி9 ( ARM Mali-G77 MC9) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போன் டிரிபிள் லேயர் செட்டப் கொண்டுள்ளது. அந்த வகையில், 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.

மொத்தமாக 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது. அதோடு 1 டிபி வரை எஸ்டிகார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. மேலும், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டிடிஎஸ், ஆடியோ வயர்லெஸ், ப்ளூடூத் 5.2, வை-பை 6, 3.5 ஆடியோ ஜாக், என்எஃப்சி, எஃப்எம் ரோடியோ, இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் போன்ற பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன.

இந்த போன் சைபர் பிளாக் (Cyber Black), மிராஜ் சில்வர் (Mirage Silver) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போனின் விலை ரூ.19,840 அல்லது ரூ.20,665 ஆக நிர்ணயிக்கப்படும் என்று ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. இந்த சூழலில் இன்று (ஆகஸ்ட் 3), அந்த போன் பிளிப்கார்ட்டில் ப்ரீ-ஆர்டருக்கு வந்துள்ளது. ரூ.19,999ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதோடு அறிமுக சலுகையாக ரூ.2000 உடனடி தள்ளுபடி மற்றும் ரூ.2000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி, அனைத்து வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 6 மாதத்துக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ, முதலில் ஆர்டர் செய்யும் 5000 கஸ்டமர்களுக்கு ப்ரோ கேமிங் கிட் வழங்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் இப்படிவொரு போன் கிடைப்பதால், விற்பனை சக்கைபோடு போடும் என்பதில் சந்தேகமில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix GT 10 Pro Launched Available For Pre-Order on Flipkart Check Price Specification, Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X