மிரண்டு போவீங்க.. ரூ.20,000 போதும்.. 16GB ரேம், 1TB மெமரி.. 260W ஃபாஸ்ட் சார்ஜிங்.. ப்ரீ-ஆர்டர் பிச்சிக்கும்!
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே அதிரும்படி இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ (Infinix GT 10 Pro) போன் பட்ஜெட் விலையில் சைபர் மெக்கா டிசைன், 16ஜிபி ரேம், 260W சார்ஜிங், 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், கேமிங் கிட் உடன் விற்பனைக்கு வருகிறது.
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம், பட்ஜெட் விலையில் ஃபிளாக்ஷிப் போன்களில் கொடுக்கப்படும் அம்சங்களுடன் அடுத்தடுத்து புதுப்புது மாடல்களை களமிறக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி (Infinix Note 30 5G), இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி (Infinix Hot 30 5G) ஆகிய இரண்டு போன்களும் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 6000mAh பேட்டரி என்று பிரம்மாண்ட அம்சங்களுடன் வெளியானது.

இந்த போன்களின் மூலம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றதால், அடுத்த பிரம்மாண்ட போனை பட்ஜெட் விலையில் களமிறக்க இன்பினிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டது. ஆனால், இந்த போன் ஸ்மார்ட்போன் மார்கெட்டையே வியப்பில் ஆழ்த்தும்படி சைபர் மெக்கா (Cyber Mecha) டிசைனுடன் உருவாக்கப்பட்டிருப்பது, அந்த போனின் எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்துள்ளது. இப்போது, இந்த போனின் ப்ரீ-ஆர்டர் தேதி வெளியாகியிருக்கிறது. இதன் விலை, அம்சங்கள், ஆஃபர்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு.
இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 10 Pro Specifications): இந்த இன்பினிக்ஸ் போன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் பிரைட்னஸ் வருகிறது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8050 (MediaTek Dimensity 8050) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன் டிரிபிள் லேயர் பேக் கேமரா செட்டப் உடன் 108 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 8 எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்டிருக்கிறது.
32 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என்று 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. 1 டிபி வரை எஸ்டிகார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேட்டரியில் 160W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 260W ஃபாஸ்ட் சார்ஜிங் என்று 2 வேரியண்ட் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம் வெறும் 6 நிமிடங்களில் போனை ஃபுல் சார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.
இந்த சூழலில் பிளிப்கார்ட்டில் (Flipkart) விற்பனைக்கு கிடைக்கும் என்றும் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி ப்ரீ-ஆர்டர் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரீ-ஆர்டர் மூலம் முதலில் ஆர்டர் செய்யும் 5,000 பேருக்கு ப்ரோ கேமிங் கிட் (Pro Gaming Kit) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிட்டில் யுனிவர்சல் ஷோல்டர் ட்ரிகர் (Universal Shoulder Triggers), கேமிங் ஃபிங்கர் ஸ்லீவ் (Gaming Finger Sleeves), கார்பன் பாக்ஸ் (Carbon Box) உள்ளிட்டவை அடங்கும். அதுமட்டுமல்லாமல், ரூ.2,000 உடனடி தள்ளுபடி மற்றும் ரூ.2000 மதிப்பிலான எக்சேன்ஜ் ஆஃபர் வழங்கப்படுகிறது.
அதோடு 6 மாதங்களுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ (No Cost EMI) சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அம்சங்கள் மற்றும் சலுகைகள் கொண்ட இந்த போனின் விலை ரூ.20,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் சைபர் மெக்கா டிசைன் கொண்ட போன் வெளியாவது, இதுவே முதல் முறையாகும்.
இந்த போனின் முழு அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்கள் இந்த வாரத்துக்குள் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








