ரூ.12000 போதும் பக்கா 5ஜி போன் வாங்கலாம்! 50 எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி என எல்லாமே சிறப்பு!

|

இந்தியாவில் மற்றொரு மலிவு விலை 5ஜி போன் விரைவில் அறிமுகம் ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை இன்ஃபினிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது Infinix Hot 20 5ஜி ஆகும். ரூ.10,000 விலைப்பிரிவில் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று.

மலிவு விலையில் 5ஜி போன்கள்

மலிவு விலையில் 5ஜி போன்கள்

இந்தியாவில் 5ஜி அறிமுகமாகும் என்ற தகவல் வெளியான போது ஒவ்வொரு 5ஜி ஸ்மார்ட்போனும் உச்ச விலையில் அறிமுகமானது. இந்தியாவில் விரைவில் 5ஜி என்ற தகவல் வெளியான போது மிட் ரேன்ஜ் விலைப் பிரிவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகத் தொடங்கியது. இந்தியாவில் 5ஜி அறிமுகமாகிவிட்டது, படிப்படியாக 5ஜி சேவைக் கிடைக்கும் பகுதிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களானது மலிவு விலையில் அறிமுகமாகத் தொடங்கிவிட்டது.

சிறந்த 5ஜி போன்

சிறந்த 5ஜி போன்

மலிவு விலையில் 5ஜி போன் என்பது, கையில் வைத்திருக்கும் 4ஜி போனே நன்றாகத் தான் இருக்கிறது. எதற்கு மற்றொரு புதிய போன் என்று சிந்திப்பவர்கள் சிறந்த தேர்வாக இருக்கும். அதேபோல் புதிய 5ஜி போனை கம்மி விலையில் வாங்கலாம் என திட்டமிடுபவர்களுக்கும் சிறந்த தேர்வாக இருக்கும். அதன்படி சிறந்த 5ஜி போன் ஒன்று மலிவு விலையில் அறிமுகமாக இருக்கிறது. நாம் பேசிக் கொண்டிருப்பது இன்ஃபினிக்ஸ் ஹாட் 20 5ஜி குறித்து தான். ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

6.6 இன்ச் டிஸ்ப்ளே

6.6 இன்ச் டிஸ்ப்ளே

இந்தியாவில் Infinix Hot 20 ஆனது டிசம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ், 5ஜி நெட்வொர்க் ஆதரவு மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே என பல மேம்பட்ட ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

பிளிப்கார்ட்டில் Infinix Hot 20 5G

பிளிப்கார்ட்டில் Infinix Hot 20 5G

இந்த ஸ்மார்ட்போனின் விலை, வெளியீட்டு தேதி மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் 91மொபைல்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனானது 12 5ஜி பேண்டுகளுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே இந்த புதிய ஹாட் 20 5ஜி போனும் பிளிப்கார்ட் தளத்தில் பிரத்யேக விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனில் 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதத்துடன் கூடிய 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்ட் 12 ஓஎஸ் மூலம் இயக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Infinix Hot 20 5G விலை மற்றும் வெளியீட்டு தேதி

Infinix Hot 20 5G விலை மற்றும் வெளியீட்டு தேதி

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.12,000க்குள் வெளியாகும் என கூறப்படுகிறது. நவம்பர் 24 ஆம் தேதி அதாவது நாளை இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்படும் என ஆதாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Hot 20 5G ஆனது டிசம்பர் 1 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் எனவும் கூறப்படுகிறது.

Infinix Hot 20 5G சிறப்பம்சங்கள்

Infinix Hot 20 5G சிறப்பம்சங்கள்

Infinix Hot 20 5G சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 120 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் கூடிய 6.6 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயங்கும் எனவும் 5ஜி நெட்வொர்க் கனெக்டிவிட்டி மற்றும் 12 பேண்ட் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

50 எம்பி பிரைமரி கேமரா

50 எம்பி பிரைமரி கேமரா

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனானது முன்னதாகவே இந்தியாவிற்கு வெளியே அறிமுகமானது. இதை வைத்து ஓரளவு இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை கணித்துவிடலாம்.

ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 எம்பி முதன்மை கேமரா சென்சார் மற்றும் 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா என இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5ஜி ஆதரவுடன் மலிவு ஸ்மார்ட்போன் என்றால் வரவேற்கத்தக்க விஷயம் தான். வீடியோ அழைப்புகளுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி ஷூட்டர் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

சிறிது நாட்கள் மட்டும் காத்திருந்தால் போதும்

சிறிது நாட்கள் மட்டும் காத்திருந்தால் போதும்

Infinix Hot 20 ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் எனவும் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 204 கிராம் ஆகும். 5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத், GPS மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவை இணைப்பு ஆதரவுகளாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது இன்று இரவு முதல் பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் இன்னும் சிறிது நாட்கள் மட்டும் காத்திருந்தால் போதும் மலிவு விலையில் சிறந்த 5ஜி போனை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Infinix Going to Launch a Low Price 5G Smartphone: Infinix Hot 20 5G with 50MP Camera, 5000 mAh Battery and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X