Home
Mobile

ஓடியாங்க, ஓடியாங்க.. 108MP கேமரா.. 45W சார்ஜிங்.. LCD டிஸ்பிளே.. ஆபரில் இன்பினிக்ஸ் 5G போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் டேஸ் (Infinix Days) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு அசத்தலான இன்பினிக்ஸ் போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்களை இங்கே சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போனை ரூ.12,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது.

ஓடியாங்க, ஓடியாங்க.. 108எம்பி கேமரா.. ஆபரில் இன்பினிக்ஸ் 5G போன்..

அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி மாடலை ரூ.14,999 விலையில் வாங்க முடியும். பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.13,999 இருந்தால் போதும் 108எம்பி கேமரா கொண்ட இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போனை வாங்கிவிட முடியும்.

இதுதவிர இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி, இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 5ஜி, இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி உள்ளிட்ட பல்வேறு இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு தற்போது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்பினிக்ஸ் போன்களை வாங்க இதுதான் சரியான நேரம். மேலும் இப்போது இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி அம்சங்கள் (Infinix Note 30 5G specifications): 6.78 இன்ச் புல்எச்டி பிளஸ் எல்சிடி (LCD)டிஸ்பிளே கொண்டுள்ளது இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி. பின்பு 2460 × 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 580 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 7என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 7nm) சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதுதவிர மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

108 எம்பி (QVGA) மெயின் கேமரா +2 எம்பி டெப்த் சென்சார் லென்ஸ் + ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஓடியாங்க, ஓடியாங்க.. 108எம்பி கேமரா.. ஆபரில் இன்பினிக்ஸ் 5G போன்..

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இன்டர்ஸ்டெல்லர் ப்ளூ (Interstellar Blue), மேஜிக் பிளாக் (Magic Black), சன்செட் கோல்டு (Sunset Gold) நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Days Sale: 25 percent discount on Infinix Note 30 5G on Flipkart: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X