10 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்.! வீடியோ.!
இன்பினிக்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம அறிமுகம் செய்யும் ஒரு சில ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இந்நிறுவனம் ஸ்மார்ட்போனினை பத்தே நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் 160 வாட் அல்ட்ரா சார்ஜிங் வசதியை விரைவில் கொண்டுவர உள்ளதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில் 160 வாட் அல்ட்ரா சார்ஜிங் வசதியை இன்பினிக்ஸ் தனது கான்செப்ட் போன் 2021 மாடலில் வழங்கி உள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக இந்த பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் ஆனது 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை வெறும் பத்தே நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடும். எனவே உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்.
அதேபோல் இந்த புதிய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது ஸ்மார்ட்போனின் வெப்ப அளவு 40 டிகிரியை கடக்கவில்லை என இன்பினிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் வெப்ப அளவை கணக்கிட 20 சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த சோதனைகளின் போதே ஸ்மார்ட்போனின் வெப்ப அளவு 37.3 டிகிரியாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

குறிப்பாக இன்பினிக்ஸ் கான்செப்ட் போன் 2021 மாடலின் சில அம்சங்களும் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். இன்பினிக்ஸ் கான்செப்ட் போன் 2021 மாடல் ஆனது 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இன்பினிக்ஸ் கான்செப்ட் போன் 2021 மாடலில் 64-பிட் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் கான்செப்ட் போன் 2021 மாடலின் பின்புறம் 48எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது. அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் கான்செப்ட் போன் 2021 மாடல். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications