நாங்க என்ன தக்காளி தொக்கா.. Google Gemini-ஐ போல Infinix AI அறிமுகம்.. AI Eraser, Smart Cutout-னு கலக்குதே!
உலகம் முழுவதும் உள்ள ஸ்மார்ட்போன்களில் கூகுளின் ஜெமினி ஏஐ (Google Gemini AI) மற்றும் சாம்சங்கின் கேலக்ஸி ஏஐ (Samsung Galaxy AI) - ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் வேளையில், இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் இன்பினிக்ஸ் ஏஐ-ஐ (Infinix AI) அறிமுகப்படுத்தி உள்ளது. தொழில்நுட்பத்துடன் சேர்த்து ஒப்பிடமுடியாத பயனர் அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் இன்பினிக்ஸ் ஏஐ-யின் கீழ் என்னென்ன அம்சங்கள் அணுக கிடைக்கும்? இது எந்தெந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்களில் அணுக கிடைக்கும்? இதோ விவரங்கள்:
இன்பினிக்ஸ் ஏஐ இயங்குதளத்தின் மையமானது - ஃபோலாக்ஸ் ஆகும், இது இன்பினிக்ஸ்-ன் தனியுரிம மாடல்கள் (Infinix's proprietary models) மற்றும் ஜிபிடி-4ஓ (GPT-4o) மற்றும் ஜெமினி (Gemini) போன்ற மேம்பட்ட வெளிப்புற மாடல்களின் (Advanced external models) கலவையால் இயக்கப்படும் ஒரு விர்ச்சுவல் அசிஸ்டன்ட் (Virtual Assistant) ஆகும்.

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இன்பினிக்ஸ் ஏஐ-யின் ஃபோலாக்ஸ் ஆனது டெக்ஸ்ட் (Text), வாய்ஸ் (Voice) மற்றும் இமேஜ் (Image) இன்புட்களை ஆதரிக்கும். மற்ற ஏஐ அசிஸ்டன்ட்களை போலவே நிகழ்நேர பதில்கள் (real-time responses) மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளை (personalized recommendations) வழங்கும்.
மேலும் இன்பினிக்ஸ் ஏஐ ஆனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தேவைகளை பூர்த்தி செய்யும் அம்சங்களையும் வழங்குகிறது. அதாவது படங்கள் மற்றும் ஆவணங்களிலிருந்து தகவல்களை 'எக்ஸ்ட்ராக்ட்' அதை 'சம்மரைஸ்' செய்து, லைவ் டெக்ஸ்ட்களை வழங்கும். சுருக்கமாக இது டேட்டா மீட்டெடுப்பை மிகவும் வேகமாகவும் திறமையாகவும் செய்யும். முக்கியமான தகவல்களை விரைவாக அணுக விரும்பும் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் இதன் ரைட்டிங் டூல்ஸ் ஆனது ரியல்டைம் கிராமர் சரிபார்ப்புகள், கன்டென்ட்-ஐ ரீரைட் செய்வது மற்றும் ஸ்டைல் மேம்பாடுகளை வழங்கும். இது மின்னஞ்சல்கள், அறிக்கைகள் மற்றும் பிற டெக்ஸ்ட்களை மெருகூட்டுவதை உறுதிசெய்கிறது. கூடவே தெளிவு, தொனி மற்றும் துல்லியத்தையும் மேம்படுத்துகிறது.
கிரியேட்டிவ் துறைகளில் இருப்பவர்களுக்கு, இதன் கீழ் கிடைக்கும் மேஜிக் கிரியேட் ஆனது உங்களுடைய யோசனைகளை யதார்த்தமாக மாற்ற உதவுகிறது. நீங்கள் சோஷியல் மீடியா போஸ்ட்களை உருவாக்கினாலும், பாடல்களை எழுதினாலும் அல்லது ஸ்டோரிபோர்டுகளை உருவாக்கினாலும், இந்த அம்சம் ஆக்கப்பூர்வமான செயல்முறைக்கு வழிவகுக்கும்.
மேலும் சுற்றுலாப் பயணிகள் விஷுவல் லுக் அப் மூலம் பயனடையலாம், இது ஒரு புகைப்படத்திலிருந்து அடையாளங்கள் மற்றும் கலாச்சார தளங்கள் பற்றிய விரிவான தகவலை வழங்கும் திறன் கொண்டது. மேலும் அவர்களின் பயண அனுபவங்களை வளமான, சூழல் நுண்ணறிவுகளுடன் மேம்படுத்துகிறது.
இன்பினிக்ஸ் ஏஐ - குறிப்பிட்ட பிராந்திய விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட அம்சங்களையும் அறிமுகப்படுத்துகிறது. ஏஐ வால்பேப்பர் ஆனது மத்திய கிழக்கு, இந்தியா, துணை-சஹாரா ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளில் உள்ள பயனர்களின் கலாச்சார அழகியலுக்கு ஏற்ப வால்பேப்பர்களை மாற்றியமைக்கிறது.
இந்த கஸ்டமைசேஷன்கள் - பயனர்கள் தங்களின் தனித்துவமான பாணிகளை பிரதிபலிக்கும் தனிப்பயனாக்கப்பட்ட பேக்கிரவுண்டை பெற உதவுகிறது. இதன்கீழ் கிடைக்கும் ஏஐ ஏரேசர், ஸ்மார்ட் கட்அவுட் மற்றும் ஏஐ ஸ்கெட்ச் போன்ற கூடுதல் டூல்கள் பயனர்கள் உயர்தர காட்சிகளை சிரமமின்றி உருவாக்க உதவுகின்றன.
இதுதவிர்த்து இன்பினிக்ஸ் நிறுவனமானது அதன் இன்பினிக்ஸ் ஏஐ-ல் இயல்பான மொழித் தேடல்களுக்கான ஸ்மார்ட் சேர்ச் (Smart Search) மற்றும் மொபைல் டேட்டா மற்றும் பேலன்ஸ் குறித்த விசாரணைகளை ( Mobile Data and Balance Inquiry) செய்வது போன்ற திறன்களை (வருங்காலத்தில்) விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








