ப்ரீ-ஆர்டரில் சாம்சங் கேலக்ஸி நோட்-2?

அறிமுகமான சில தினங்களிலேயே இந்த ஃபேப்லட்டிற்கு ப்ரீ-ஆர்டர் செய்யும் தேதியை பல வலைத்தளங்கள் வெளியிட்டு வருகின்றது. இதனால் வாடிக்கையாளர்களின் பரபரப்பு கூடி கொண்டே போகிறது.
5.5 இஞ்ச் திரையில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த ஃபேப்லட் பார்ப்பவர்களின் மனதை எளிதாக கவர்ந்து விடுகிறது. ஆன்ட்ராய்டு புதிய வெர்ஷன் கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்களை வாடிக்கையாளர்கள் அதிகம் தேடி கொண்டிருக்க, ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் வெர்ஷன் இயங்குதளத்தை வழங்குகிறது கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்.
இதன் மேம்படுத்தப்பட்ட எஸ்-பென் வசதி, வாடிக்கையாளர்களிடையே புதிய ஆர்வத்தை உருவாக்கும் என்றும் கருதப்படுகிறது. இப்போது வரும் ஊடகங்களிலும் கூட எஸ்-பென் வசதி முதன்மைப்படு்த்தி காட்டப்படுகிறது. இதனால் கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டுக்கு பல வலைத்தளங்கள் போட்டி போட்டு கொண்டு ப்ரீ-ஆர்டர் தேதியினை வெளியிட்டு வருகின்றன.
ஆன்லைன் வலைத்தளமான இன்ஃபிபீம் வலைத்தளத்தில் கூடிய விரைவில் இந்த கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் ப்ரீ-ஆர்டரில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜிஎஸ்எம் அரீனா வலைத்தளத்தில் செப்டம்பர் 22ம் தேதி ப்ரீ-ஆர்டர் செய்யலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்ஃபிபீம் வலைத்தளத்தில் இந்த புதிய கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் ரூ. 38,500 விலையில் கிடைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றது. இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பிறகு இந்த ஃபேப்லட்டின் விலை, வலைதத்ளங்களில் இன்னும் சற்று குறையலாம் என்ற பேச்சும் இருப்பதனால், வாடிக்கையாளர்கள் கொஞ்சம் பொருத்திருந்தும் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications