ஆன்லைனில் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ப்ரீ-ஆர்டர்!

Posted By:

ஆன்லைனில் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ப்ரீ-ஆர்டர்!
ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும் என்று பலரும் காத்திருந்தனர். இதை தொடர்ந்து ஆப்பிள் நிறுனத்தின் ஐபோன்-5 ஸ்மார்ட்போனும் ஒரு வழியாக அறிமுகமாகிவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானது மட்டும் அல்லாமல், இதற்கு ப்ரீ-ஆர்டரும் ஆரம்பமாகிவிட்டது.

16 ஜிபி மெமரி வெர்ஷன் கொண்ட ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு ப்ரீ-ஆர்டர் ஆரம்பம். இந்த செய்தியினை கேட்டும் போதே ஐபோன்-5 ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அளவுகடந்த மகிழ்ச்சியும் ஆரம்பமாகி இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனை இன்ஃபிபீம் ஆன்லைன் வலைத்தளத்தில் ப்ரீ-ஆர்டரில் பெறலாம். இந்த ஸ்மார்ட்போனை ப்ரீ-ஆர்டர் செய்வதற்கு முன்பணாக ரூ. 5000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று, இன்ஃபிபீம் வலைத்தளத்தினை பார்க்கும் போது தெரிகிறது. இது போன்ற விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும் என்றால் இன்னும் கொஞ்சம் பொருத்திருந்து அதிகார பூர்வமான அறிவிப்பின் பேரில் வாங்குவது சிறந்தது தான்.

ஆனால் அதற்கும் முன்பு இந்த ஸ்மார்ட்போனின் ப்ரீ-ஆர்டர் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், இந்த ஸ்மார்ட்போனை வாங்கவேண்டும் என்றும் அதிக ஆவல் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த இன்ஃபிபீம் வலைத்தளத்தில் தகவல்களை பெறலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்