Home
Mobile

ஏப்ரல் 1 குள்ள.. பணத்தை ரெடி பண்ணிடுங்க.. ரூ.20,000 பட்ஜெட்டில் புதிய OnePlus போன்.. என்ன மாடல்?

ரூ.70,000 அல்லது ரூ.40,000 செலவு பண்ணி ஒன்பிளஸ் 12 (OnePlus 12) அல்லது ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) போன்ற மாடல்களை எல்லாம் என்னால வாங்க முடியாதுப்பா.. ரூ.20,000 பட்ஜெட்டில் ஒரு தரமான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வராதா என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதியன்று, ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு புதிய பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அது என்ன மாடல்? அதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ஏப்ரல் 1-ல் அறிமுகம்.. ரூ.20,000 பட்ஜெட்டில் புதிய OnePlus போன்!

என்ன மாடல்? ஒன்பிளஸ் நிறுவனம் அதன் நோர்ட் சீரீஸின் கீழ் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) மாடலை வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அறிமுகத்திற்கு பின்னர் அமேசான் இந்தியா (Amazon India) வழியாக விற்பனைக்கு வருமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் பக்கத்தில் உள்ள லேண்டிங் பேஜ் வழியாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் ஒவ்வொன்றாக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் (Chipset) மற்றும் கலர் ஆப்ஷன்கள் (Color Options) வெளிப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், தற்போது ரேம் மற்றும் ஸ்டோரேஜ் (RAM and Storage) ஆப்ஷன்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 1-ல் அறிமுகம்.. ரூ.20,000 பட்ஜெட்டில் புதிய OnePlus போன்!

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் நோர்ட் சிஇ4 ஸ்மார்ட்போன் ஆனது எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் (LPDDR4x RAM) மற்றும் யுஎப்எஸ் 3.1 (UFS 3.1) ஸ்டோரேஜ் உடன் வரும் என்பது உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இடம்பெறும் என்பதும் உறுதிப்படுத்தியுள்ளது.

8ஜிபி ரேம் + 256ஜிபி என்பது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் ஆப்ஷனாக (High-end Option) இருக்கும். பேஸிக் வேரியண்ட் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து 8ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவும் (8GB RAM Virtual RAM Support) கிடைக்கும். இதெல்லாம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் உடன் இணைக்கப்படும்.

ஏப்ரல் 1-ல் அறிமுகம்.. ரூ.20,000 பட்ஜெட்டில் புதிய OnePlus போன்!

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான விவோ வி30 ஸ்மார்ட்போனுக்கு பிறகு, ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Snapdragon 7 Gen 3 Chipset) உடன் வரும் இரண்டாவது ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 மாடலாகத்தான் இருக்கும். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் ஆனது டார்க் குரோம் (Dark Chrome) மற்றும் செலாடன் மார்பிள் (Celadon Marble) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 மாடலானது ரூ.20,000 - ரூ.25,000 க்குள் என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 என்கிற பெயரில் ஏப்ரல் 1 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுமாகும் இதே மாடல் மார்ச் 21 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் ஏஸ் 3வி (OnePlus Ace 3V) என்கிற பெயரில் அறிமுகமாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஆக உலகளாவிய அறிமுகத்தை காணும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Indians be ready New 2024 OnePlus Smartphone Nord CE 4 Launching on April 1 Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X