எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
முதல் விற்பனையிலேயே இந்திய மொபைல் மார்க்கெட்டையும், பிளிப்கார்ட் வலைத்தளத்தையும் ஒரு குலுக்கு குலுக்கிய மோட்டோரோலாவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்று, மீண்டும் விற்பனைக்கு வந்து உள்ளது, அதுவும் ரூ.5000 சிறப்பு தள்ளுபடி விலையின் கீழ்! அது என்ன மாடல்? இதோ விவரங்கள்:
அதென்ன மாடல்? இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி (Motorola Edge 50 Pro 5G) ஸ்மார்ட்போன் தான். இந்த மாடல் இன்று (ஏப்.19) மதியம் 3 மணி முதல் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக மீண்டும் விற்பனைக்கு வருகிறது. இந்த விற்பனையின் போது கேஷ்பேக் / கூப்பன் சலுகையின் கீழ் ரூ.5000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர்த்து பிளிப்கார்ட் ஆக்சிஸ் கார்டு வழியாக 5% கேஷ்பேக், எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு வழியிலான நான்-இஎம்ஐ பரிவர்த்தனைக்கு ரூ.2000 தள்ளுபடியும், அதே எச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைக்கு ரூ.2500 தள்ளுபடியும் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் அசல் அறிமுக ரூ.31,999 ஆகும். ஆனால் விற்பனை சலுகையின் ஒரு பகுதியாக இது ரூ.27,999க்கும், மறுகையில் உள்ள 12ஜிபி ரேம் (அசல் விலை ரூ.35,999) வேரியண்ட் ரூ.31,999க்கும் வாங்க கிடைக்கும். இரண்டுமே வேரியண்ட்களுமே பிளாக் பியூட்டி, லக்ஸ் லாவெண்டர் மற்றும் மூன்லைட் பேர்ல் என்கிற 3 கலர்களில் வாங்க கிடைக்கும்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி-யின் முக்கிய அம்சங்கள்: இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஹலோ யுஐ உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 முக்கிய ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று மோட்டோரோலா நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உடனான 6.7-இன்ச் 1.5K பிஎல்ஓடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த சிப்செட் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ் (OIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் 50எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் + 10எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் உள்ளன.
முன்பக்கத்தில், குவாட்-பிக்சல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோஃபோகஸ் ஆதரவு உடனான 50எம்பி செல்பீ கேமரா உள்ளது. தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி68-ரேடிங்கையும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 125W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் டர்போ சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 4,500எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. குறிப்பிடத்தக்க வேறுபாடாக 12ஜிபி ரேம் ஆப்ஷன் உடன் 125W சார்ஜர் வரும்; 8ஜிபி ரேம் ஆப்ஷன் உடன் 68W சார்ஜர் வரும்.

மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா (Motorola Edge 50 Ultra) மற்றும் எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) மாடல்களின் விலை: சமீபத்தில் இவ்விரு மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களை உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இரண்டிற்கும் இடையேயான முக்கிய வேறுபாடுகளை பொறுத்தவரை, அல்ட்ரா மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் உள்ளது; ஃப்யூஷன் மாடலில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது.
விலையை பொறுத்தவரை, மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.88,900 க்கும்,மறுகையில் உள்ள மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஆனது சுமார் ரூ.35,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் எப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்கிற விவரங்களை மோட்டோரோலா நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications