Home
Mobile

சைனீஸ் போன்களை நூடுல்ஸ் போட்ட இந்திய கம்பெனி.. ரூ.10,000 பட்ஜெட்ல.. 5G,120Hz கர்வ்டு டிஸ்பிளே, 64MP கேமரா!

யாரெல்லாம் ரூ.10,000 பட்ஜெட்டில் "நல்ல-நல்ல" 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறார்களோ.. அவர்களுக்குத்தான் ஸ்மார்ட்போன் மார்க்கெட் சொந்தம் என்பதை.. ரெட்மி, ரியல்மி, ஒப்போ போன்ற சீன நிறுவனங்களுக்கு மட்டுமின்றி.. மோட்டோ, இன்பினிக்ஸ், சாம்சங் போன்ற மற்ற நாட்டு நிறுவனங்களுக்கும் கூட நன்கு அறியும்!

"இந்த் மேட்டர்" இந்திய நிறுவனமான லாவாவிற்கும் நன்றாக தெரியும். ஏற்கனேவே ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் லாவா பிளேஸ் 2 5ஜி (Lava Blaze 2 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் வாங்க கிடைக்கிறது. அதன் தொடர்ச்சியாக லாவா நிறுவனம் இன்னொரு புதிய பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

ரூ.10,000 பட்ஜெட்ல.. 5G,120Hz கர்வ்டு டிஸ்பிளே, 64MP கேமரா!

என்ன மாடல்? என்ன விலை? லாவா நிறுவனம் கர்வ் வில் லீட் தி வே (Curve will lead the way) என்கிற டேக்லைன் உடனான டீசர் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஒரு புதிய ஸ்மார்ட்போனுக்கான டீஸர் ஆகும். அந்த ஸ்மார்ட்போன் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி (Lava Blaze Curve 5G) என்கிற பெயரின்கீழ் வருகிற மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே மற்றும் 64 மெகாபிக்சல் மெயின் சோனி சென்சார் உடன் வரும் என்று கூறப்படுகிறது. விலையை பொறுத்தவரை, பெரும்பாலும் இதுவும் பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனை போலவே ரூ.10,000 பட்ஜெட்டை சுற்றி எங்காவது ஒரு புள்ளியில் அறிமுகம் செய்யப்படலாம்.

ரூ.10,000 பட்ஜெட்ல.. 5G,120Hz கர்வ்டு டிஸ்பிளே, 64MP கேமரா!

முன்னதாக அறிமுகமான லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை என்ன? இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.10,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இது கிளாஸ் பிளாக், கிளாஸ் ப்ளூ மற்றும் கிளாஸ் லாவெண்டர் கலர் ஆப்ஷன்களில் லாவா இ-ஸ்டோர் மற்றும் அமேசான் வழியாக விற்பனை செய்யப்படுகிறது.

லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 720x1600 பிக்சல்ஸ் உடனான 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது செல்பீ கேமராவிற்கான ஹோல் பஞ்ச் கட்அவுட்டை கொண்ட 2.5டி கர்வ்டு டிஸ்பிளேவாகும்.

ரூ.10,000 பட்ஜெட்ல.. 5G,120Hz கர்வ்டு டிஸ்பிளே, 64MP கேமரா!

ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் உடன் வரும் லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. விர்ச்சுவல் ரேம் அம்சத்தின் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை ரேம் ஆக கடன் வாங்கி, அதை மொத்தம் 12ஜிபி ஆக அதிகரிக்கவும் முடியும்.

இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இந்த லாவா ஸ்மார்ட்போனில் 128ஜிபி வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. பிரத்யேக எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக இதை 1டிபி வரை விரிவாக்கவும் முடியும். கேமராக்களை பொறுத்தவரை, லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனில் எல்இடி ஃப்ளாஷ் (LED Flash) உடனான டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

அதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 0.08 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய, ஸ்கிரீன் ஃபிளாஷ் ஆதரவு (Screen Flash Support) உடனான 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) உடன் வரும் இந்த லாவா ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் (Face Unlock) அம்சமும் உள்ளது.கடைசியாக லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 18வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Indian Mobile Company Lava to Launch New phone With Curved Display Check Blaze Curve 5G Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X