Home
Mobile

சைனீஸ் 5G போன்களை கொத்துக்கறி போட்ட இந்திய கம்பெனி! ரூ.10,000 க்கும் கம்மி.. 50MP கேமரா, 5000mAh பேட்டரி, 5ஜி!

இந்திய சந்தையில் இதுவரை வெளியான அனைத்து பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போன்களையும் தூக்கி சாப்பிடும் நோக்கத்தின்கீழ்.. குறிப்பாக சீன நிறுவனங்களின் 5ஜி போன்களை காலி செய்யும்படியான விலை மற்றும் அம்சங்களுடன்.. இந்திய நிறுவனமான லாவா ஒரு புதிய 5ஜி போனை அறிமுகம் செய்யவுள்ளது.

என்ன மாடல்? லாவா நிறுவனம் அதன் யுவா சீரிஸின் கீழ் லாவா யுவா 5ஜி (Lava Yuva 5G) என்கிற மாடலை மே 30 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. எக்ஸ் தளம் வழியாக லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்திய லாவா நிறுவனம், இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் சில முக்கிய அம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

ரூ.10,000 க்கும் கம்மி.. 50MP கேமரா, 5000mAh பேட்டரி, 5ஜி!

மே 30-ல் சரியாக எப்போது அறிமுகமாகும்? லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மே 30 ஆம் தேதி அன்று மதியம் 12 மணிக்கு அறிமுகமாகும். அறிமுகத்திற்கு பின்னர், இது அமேசான் இந்தியா வலைத்தளம் (Amazon India Website) வழியாக விற்பனைக்கு வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான மைக்ரோசைட் தற்போது அமேசான் இணையதளத்தில் நேரலையில் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

லாவா யுவா 5ஜி-யின் டிசைன் எப்படி இருக்கும்? லாவா வெளியிட்டுள்ள டீஸர் வீடியோ (Teaser Video) வழியாக யுவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு ஹோல் பஞ்ச் டிஸ்பிளே டிசைன் (Hole Punch Display Design) மற்றும் வட்டமான மூலைகளுடன் ஒரு பிளாட் ஆன ஃபிரேம்-ஐ கொண்டுள்ளது. மேலு இது மேட் ஃபினிஷ் உடன் ஒரு கிளாஸ் பேக்கையும் கொண்டுள்ளது. பேக் பேனலின் அடிப்பகுதியில் லாவா பிராண்டிங் மற்றும் 5ஜி என்கிற டெக்ஸ்ட்கள் செங்குத்தாக பொறிக்கப்பட்டுள்ளன.

ரூ.10,000 க்கும் கம்மி.. 50MP கேமரா, 5000mAh பேட்டரி, 5ஜி!

லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இது ஒரு வட்ட வடிவிலான கேமரா மாட்யூலில் கொண்டிருக்கும். அதில் ஏஐ ஆதரவு (AI-Backed) கொண்ட 50-மெகாபிக்சல் மெயின் கேமரா உடனான டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) இருக்கும் என்பதை லாவாவின் டீஸர் வீடியோ வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் வரலாம். இது 6ஜிபி அல்லது 8ஜிபி ரேம் விருப்பங்களுடன் அறிமுகம் செய்யப்படலாம். சிப்செட்டை பொறுத்தவரை 2.4GHz அதிகபட்ச கிளாக் ஸ்பீட் உடன் 2 கோர்ஸ் மற்றும் 2.0GHz க்ளாக்கிங் 6 கோர்ஸ் கொண்ட ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி ப்ராசஸரை பேக் செய்யலாம். அது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 SoC) ஆக அல்லது டைமன்சிட்டி 6080 சிப்செட் (Dimensity 6080 SoC) ஆக இருக்கலாம்.

என்ன விலைக்கு வரும்? லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்திய சந்தையில் இது ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ரூ.10,000 க்குள் வாங்க கிடைக்கும் 5ஜி போன்களின் பட்டியலில் ஒரு முக்கிய போட்டியாளர் மே 30-ல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன? விவோ எக்ஸ் போல்ட் 3 ப்ரோ (Vivo X Fold 3 Pro): ஜூன் 6, 2024 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஷாவ்மீ சிவி 14 (Xiaomi Civi 14) ஜூன் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கூடவே ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் (OnePlus Nord CE4 Lite) மாடலும் கூட ஜூன் மாத நடுப்பகுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian Mobile Brand Lava to Launch Yuva 5G A New 5G Smartphone Under Rs 10000 on May 30
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X