Home
Mobile

சீன மொபைல்களை ஓடவிடும் இந்திய கம்பெனி.. ரூ.6999-ஐ ரெடியா கையில எடுத்து வச்சிக்கோங்க.. என்ன போன்?

சூப்பர்-பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் வாங்க கிடைக்கும்.. அதாவது ரூ.7,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் பெரும்பாலான சீன மொபைல் போன்களை எல்லாம் ஓடவிடும் விலை மற்றும் டிசைனில் இந்திய மொபைல் பிராண்டின் (Indian Mobile Brand) புதிய ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகத்திற்கு தயாராக உள்ளது!

நாம் இங்கே பேசுவது லாவா நிறுவனத்தின் லாவா யுவா 2 (Lava Yuva 2) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது கூடிய விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த கையோடு, லாவா யுவா 2 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயமும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த போன் ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கும்!

ரூ.6999-ஐ ரெடியா கையில எடுத்து வச்சிக்கோங்க.. என்ன போன்?

லாவா யுவா 2 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவும் என்றாலும் கூட, லாவா யுவா 2 ப்ரோ (Lava Yuva 2 Pro) மாடலானது ஏற்கனவே இந்தியாவில் அறிமுகமாகி விட்டதால், இதுவும் கிட்டத்தட்ட அதே வடிவமைப்பு மற்றும் அதில் இருந்து சில அம்சங்களை கடன் வாங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம் லாவா யுவா 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் இதுவும் கூட, இந்திய மொபைல் மார்க்கெட்டில் சலசலப்பை கிளப்பியது. ஏனென்றால் லாவா யுவா 2 ப்ரோவானது ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது.

வெறும் ரூ.7,999 க்கு ஐபோன் டிசைனில் (iPhone Design) ஒரு ஸ்மார்ட்போன் கிடைத்தால் எப்படி சலசலப்பாகாமல் இருக்கும்.. லாவா யுவா 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மட்டுமல்ல, அது பேக் செய்த அம்சங்கள் கூட பலரையம் ஈர்க்கும்படி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் (MediaTek Helio G37 SoC) மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் இது 720x1600 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 269 பிபிஐ உடனான 6.5 இன்ச் எச்டி பிளஸ் நாட்ச் டிஸ்பிளேவை (HD+ Notch Display) கொண்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் லாவா யுவா 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) பேக் செய்கிறது.

அதில் 13 மெகாபிக்சல் மெயின் ஏஐ கேமரா (13MP AI Camera) உள்ளது. முன்பக்கத்தில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் உள்ளது. சுவாரசியமாக இந்த ஸ்,ஸ்மார்ட்போனில் செல்பீகளுக்கான ஸ்க்ரீன் ஃபிளாஷ் (Screen Flash) ஆதரவும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, லாவா யுவா 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் சார்ஜிங் அடாப்டர் (Charging Adapter) இடம்பெறும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கனெக்டிவிட்டி (Connectivity) ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது வைஃபை, ப்ளூடூத் வி5.1, யூஎஸ்பி டைப்-சி மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக், டூயல் 4ஜி சிம் கார்டு சப்போர்ட் போன்றவைகளை கொண்டுள்ளது.

ஒருவேளை நீங்கள் லாவா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்றால் ரூ.8000 க்குள் வாங்க மற்ற நிறுவனங்களின் மொபைல் போன்களை கருத்தில் கொள்ளலாம். அப்படியாக ரூ.8000 க்குள் இந்தியாவில் வாங்க கிடைக்கும் சில பெஸ்ட் போன்களின் பட்டியல் (Best smartphones under Rs 8000) இதோ:

ரெட்மி 8ஏ டூயல் (ரூ.7,990), ரியல்மி நார்சோ 50ஐ (ரூ.7,499), ரெட்மி 9ஏ ஸ்போர்ட் (ரூ.7,499), டெக்னோ பாப் 7 ப்ரோ (ரூ.7,299), டெக்னோ பாப் 6 ப்ரோ (ரூ.6,799), டெக்னோ பாப் 5 (ரூ.6,299), மோட்டோரோலா மோட்டோ சி பிளஸ் ரூ.5,970) மற்றும் ரெட்மி ஏ1 (ரூ.5,899).

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian Mobile Brand Lava to Launch New Super Budget Phone Lava Yuva 2 For Just Rs 6999 Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X