Home
Mobile

சைனீஸ் 5ஜி போன்களை நூடுல்ஸ் போட்ட இந்திய நிறுவனம்.. ரூ.10000 பட்ஜெட்டில் 8GB ரேம், 64MP கேம், 5000mAh பேட்டரி!

சீன நிறுவனங்களின் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை எல்லாம் அப்படியே ஓரங்கட்டம் படியாக.. இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான லாவா ரூ.10,000 பட்ஜெட்டில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அது லாவா போல்ட் 5ஜி (Lava Bold 5G) மாடலாகும்.

லாவா போல்ட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? எப்போது முதல் லாவா போல்ட் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்? அடுத்தடுத்த நாட்களில் இந்திய சந்தையில் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன? இதோ விவரங்கள்:

சைனீஸ் 5ஜி போன்களை நூடுல்ஸ் போட்ட இந்திய நிறுவனம்!

லாவா போல்ட் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: லாவாவின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்டில் இயங்குகிறது. இது 6.67-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் ஐபிP64 ரேட்டிங் கட்டமைப்பையும் கொண்டுள்ளது. இது 64 மெகாபிக்சல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. கடைசியாக 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது

லாவா போல்ட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: லாவா போல்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,499 என்கிற அறிமுக தொடக்க விலைக்கு (introductory starting price) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது லாவா போல்ட் 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும்

லாவா போல்ட் 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் வாங்க கிடைக்கும். இந்த 2 ஸ்டோரேஜ் சஃபையர் ப்ளூ (Sapphire Blue) கலர் ஆப்ஷனில் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில கலர் ஆப்ஷன்கள் இருக்கலாம்; அது விற்பனையின் போது வெளிப்படுத்தப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஏப்ரல் 8 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் அமேசான் வழியாக விற்பனைக்கு வரும்.

லாவா போல்ட் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: ஓஎஸ்-ஐ பொறுத்தவரை லாவா போல்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. ஆனால் இது ஆண்ட்ராய்டு 15 க்கு மேம்படுத்தப்பட்டு, இரண்டு வருட செக்யூரிட்டி பேட்ச்களை பெறும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் 3டி கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட்டில் இயங்குகிறது.

சுவாரசியமாக விர்ச்சுவல் ரேம் அம்சத்துடன், பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை பயன்படுத்தி இன்டர்னல் ரேம்-ஐ 8ஜிபி வரை விரிவாக்கலாம். கேமராக்களை பொறுத்தவரை லாவா போல்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 64-மெகாபிக்சல் சோனி சென்சார் உடனான ஏஐ ஆதரவு கொண்ட ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்ளுக்கு, இது 16-மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை இது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி 64 ரேட்டிங்கை கொண்டுள்ளது. கடைசியாக லாவா போல்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.

அடுத்தடுத்த நாட்களில், இந்திய சந்தையில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன?
1. போக்கோ சி71 (POCO C71): இது ஏப்ரல் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை ரூ.7,000 க்கும் குறைவாக இருக்கலாம்.
2. ரியல்மி நார்சோ 80 ப்ரோ (Realme Narzo 80 Pro): இது ஏப்ரல் 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை ரூ.20,000 க்கும் குறைவாக இருக்கலாம்.
3. ஐக்யூ இஸட்10 (iQOO Z10): இது ஏப்ரல் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை ரூ.22,000 க்கும் குறைவாக இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian Mobile Brand Lava Launched New Budget 5G Phone Lava Bold 5G India Sale From April 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X