Home
Mobile

ப்பா.. தீயா இருக்கே.. சீன கம்பெனிகளை சிதற விடும் விலை, அம்சங்கள்.. மிரட்டும் இந்திய மொபைல் பிராண்ட்!

இந்திய மொபைல் சந்தையை "ஆட்சி செய்யும்" சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் கண்களில் விரலை விட்டு ஆடும்படியாக, இந்தியாவை சேர்ந்த ஒரு மொபைல் பிராண்ட் (Indian Mobile Brand) வருகிற மே 16 ஆம் தேதியன்று தரமான 5ஜி போன் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.

நாம் இங்கே பேசுவது லாவா (Lava) நிறுவனத்தின் அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனை (Agni 2 5G Smartphone) பற்றித்தான். இந்தியாவில் இது என்ன விலைக்கு (Price) அறிமுகம் செய்யப்படும்? என்னென்ன அம்சங்களை (Specifications) பேக் செய்யும்? போன்ற விவரங்கள் இதோ:

Lava Agni 2 5G இந்திய அறிமுக தேதி வெளியானது!

நவம்பர் 2021 இல் அறிமுகம் செய்யப்பட்ட லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போனின் "மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்" தான் இந்த லாவா அக்னி 2 5ஜி. கடந்த பல வாரங்களாக லீக்ஸ் தகவல்களில் மட்டுமே சிக்கி வந்த இந்த ஸ்மார்ட்போன் தற்போது அதிகாரப்பூர்வமாக டீஸ் (Tease) செய்யபட்டுள்ளது.

வெளியான டீசரில் போட்டோவின் வழியாக லாவா அக்னி 2 ஸ்மார்ட்போனானது வருகிற மே 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகமாகும். மேலும் இந்த போன் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் வழியாக பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

உறுதி செய்யப்பட்ட அம்சங்கள்: இது கர்வ்டு டிஸ்பிளேவை (Curved Display) கொண்டிருக்கும் மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 5ஜி ப்ராசஸர் (MediaTek Dimensity 7050 SoC) மூலம் இயக்கப்படும். மெங்கும் இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (அவுட்-ஆஃப்-பாக்ஸ்) கொண்டு இயங்கும்.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்: இது 6.5 இன்ச் எச்டி+ (1600 x 900) அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். அது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான (120Hz Refresf Rate) ஆதரவு மற்றும் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் (Finger Print Sensor) கொண்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, பேக் பேனலின் மேல் மையப்பகுதியில் உட்பொதிக்கப்பட்ட, வட்ட வடிவிலான குவாட் ரியர் கேமரா செட்டப்புடன் வரலாம். அதில் 50எம்பி மெயின் கேமரா பேக் செய்யப்படலாம். முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். பேட்டரியை பொறுத்தவரை, இதில் 44W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உடனான 5000mAh பேட்டரி பேக் செய்யப்படலாம்.

விலை நிர்ணயம்: லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனானது சுமார் ரூ.20,000 க்க அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம், முன்னதாக அறிமுகமான லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,990 க்கு அமேசான் இந்தியா வழியாக வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian Mobile Brand Lava All set to launch its New Lava Agni 2 5G Smartphone in India on May 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X