சொந்தமாக இந்திய பிராண்ட்.. கம்மி விலைக்கு புது Fold போன்.. திரும்பி பார்க்க வைத்த Realme-யின் முன்னாள் CEO!
ரியல்மி (Realme) நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் ஆன மாதவ் ஷெத் (Madhav Sheth) நெக்ஸ்ட்குவாண்டம் (NxtQuantum) நிறுவனத்தின் கீழ் ஏஐ பிளஸ் (Ai+) என்கிற புதிய ஸ்மார்ட்போன் பிராண்ட்-ஐ கடந்த 2025 ஜூலை மாதம் அறிமுகம் செய்தார்.
புதிய பிராண்ட்-ஐ அறிவித்த கையோடு 2 புதிய சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்திருந்தார். இந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன்களாக ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி (AI+ Pulse 4G) மற்றும் ஏஐ பிளஸ் நோவா 5ஜி (AI+ Nova 5G) ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின.

இதற்கிடையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஏஐ பிளஸ் நிறுவனமானது போல்டபிள் ஸ்மார்ட்போன் பிரிவில் நுழைவதை குறிக்கும் வகையில், நோவாஃபிளிப் (NovaFlip) ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. இது நோவா ப்ரோ (Nova Pro), நோவா அல்ட்ரா (Nova Ultra) ஆகிய மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்றும் ஏஐ பிளஸ் கூறுகிறது.
இந்த ஸ்மார்ட்போன்கள் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதோடு எதிர்காலத்தில் புக் ஸ்டைல் பாணியில் மடங்கக்கூடிய ஸ்மார்ட்போனை (book-style foldable smartphone) அறிமுகப்படுத்தும் திட்டத்தை கொண்டு உள்ளதாகவும் ஏஐ பிளஸ் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.
நோவாஃபிளிப் ஸ்மார்ட்போன் ஆனது நெக்ஸ்ட்குவாண்டம் ஓஎஸ் (NxtQuantum OS) கொண்டு இயங்கும் என்றும், இது "மடிக்கப்பட்ட மற்றும் திறந்த நிலைகளில் புத்திசாலித்தனமாக மாற்றியமைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றும் ஏஐ பிளஸ் நிறுவனம் கூறுகிறது.
போல்ட் செய்யப்பட்ட நிலையில் முக்கிய செயல்பாடுகளை வழங்க மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஸ்மார்ட்போனில் "ஸீரோ ப்ரீ-லோடட் ப்ளோட்வேர், எந்த ஊடுருவும் டிராக்கர்களும் இல்லை" என்றும், பயனர் தங்கள் தனிப்பட்ட தரவு மீது முழுமையான கட்டுப்பாட்டை கொண்டிருப்பார்கள் என்றும் ஏஐ பிளஸ் நிறுவனம் கூறுகிறது.
ஃபிளிப் ஸ்மார்ட்போன்கள் ஆனது மக்கள் உண்மையிலேயே தவறவிடும் விஷயங்களை மீண்டும் கொண்டு வருகின்றன: காம்பாக்ட் வடிவமைப்பு, பிஸிக்கல் இன்டராக்சன் மற்றும் கட்டுப்பாட்டு உணர்வு. அந்த அனுபவத்தில் ஏக்கம் இருக்கிறது, ஆனால் அதன் பின்னால் மிகவும் நவீன தேவையும் உள்ளது. மக்கள் எடுத்து செல்ல எளிதான, அவர்களின் கவனத்தை குறைவாக கோரும் டிவைஸ்களை விரும்புகிறார்கள்" என்று ஏஐ பிளஸ் சிஇஓ மற்றும் நெக்ஸ்ட்குவாண்டம் ஷிப்ட் டெக்நாலஜீஸ் நிறுவனர் மாதவ் ஷெத் கூறியுள்ளார்.
நோவாஃபிளிப் ஸ்மார்ட்போனின் ஹார்ட்வேர் குறித்த விவரங்களை (அம்சங்களை) ஏஐ பிளஸ் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், நோவாஃபிளிப் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.40,000 க்கு கீழ் என்கிற விலை நிர்ணயத்தை பெறும் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விலை ஆகும்.
ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி, ஏஐ பிளஸ் நோவா 5ஜி (AI Plus Pulse 4G and AI Plus Nova 5G): அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில் ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.4,999 க்கும், மறுகையில் உள்ள 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.6,999 க்கும் வாங்க கிடைத்தன
இதேபோல ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,999 க்கும், மறுகையில் உள்ள 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கு வந்தது.


Click it and Unblock the Notifications








