Home
Mobile

இன்று முதல் ப்ரீ-ஆர்டர்.. iPhone 15 முதல் iPhone 15 Pro Max வரை.. என்ன விலை? எங்கே புக்கிங் செய்வது?

கடந்த செப்.12 ஆம் தேதியன்று கலிபோர்னியாவில் நடந்த வாண்டர்லஸ்ட் நிகழ்வின் போது, , ஆப்பிள் தனது புதிய ஐபோன் மாடல்களை, அதாவது ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்தியது. எதிர்பார்த்தபடியே ஐபோன் 15 சீரிஸின் கீழ் மொத்தம் 4 மாடல்கள் வெளியாகின.

அந்த 4 மாடல்களுமே, அதாவது ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus), ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) ஆகிய 4 ஐபோன்களுமே இன்று (செப்.15) முதல் இந்தியாவில் முன்பதிவுகளை தொடங்கவுள்ளது.

iPhone 15 முதல் iPhone 15 Pro Max.. இன்று முதல் ப்ரீ-ஆர்டர்!

ஐபோன் 15 சீரீஸின் ப்ரீ-ஆர்டர்கள் இன்று (செப்.15) மாலை 5.30 மணிக்கு தொடங்கும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், பிளிப்கார்ட், விஜய் சேல்ஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆப்பிள் ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக புதிய ஐபோன்களை ப்ரீ-ஆர்டர் செய்யலாம்.

இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், மெக்சிகோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்களாலும் கூட புதிய ஐபோன்களை முன்பதிவு செய்ய முடியும்; புதிய ஐபோன்களின் ஷிப்பிங் செப்.22 முதல் தொடங்கும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது.

ஐபோன் 15 மாடலின் இந்திய விலை நிர்ணயம் என்ன? 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 ரூ 79,900 க்கும், 256 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 ரூ.89,900 க்கும் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 ரூ.1,09,900 க்கும் வாங்க கிடைக்கும்.

ஐபோன் 15 பிளஸ் மாடலின் இந்திய விலை நிர்ணயம் என்ன? 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 பிளஸ் ரூ 89,900 க்கும், 256 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 பிளஸ் ரூ.99,900 க்கும் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 பிளஸ் ரூ.1,19,900 க்கும் வாங்க கிடைக்கும்.

ஐபோன் 15 ப்ரோ மாடலின் இந்திய விலை நிர்ணயம் என்ன? 128ஜிபி ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ ரூ.1,34,900 க்கும், 256 ஜிபி ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ ரூ.1,44,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ ரூ.1,64,900 க்கும் மற்றும் 1டிபி ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ ரூ.1,84,900 க்கும் வாங்க கிடைக்கும்.

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் இந்திய விலை நிர்ணயம் என்ன? 256 ஜிபி ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ.1,59,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ.1,79,900 க்கும் மற்றும் 1டிபி ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ.1,99,900 க்கும் வாங்க கிடைக்கும்.

புதிய ஐபோன்களின் அறிமுகத்தை தொடர்ந்து ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் மற்றும் ஐபோன் 13 மாடல்களின் இந்திய விலை நிர்ணயம் குறைக்கப்பட்டுள்ளதும், ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மினி போன்ற மாடல்களின் விற்பனையை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மீதான விலைக்குறைப்பை பொறுத்தவரை, ஐபோன் 14 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,900 க்கு பதிலாக ரூ.69,900 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல ஐபோன் 14 பிளஸ் மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கு பதிலாக ரூ.79,900 க்கு வாங்க கிடைக்கிறது.

ஐபோன் 13 மீதான விலைகுறைப்பை பொறுத்தவரை,. இதன் அசல் விலை ரூ.79,900 ஆகும். ஆனால் தற்போது இது ரூ.59,900 க்கு வாங்க கிடைக்கிறது. கடந்த ஆண்டே இது ரூ.10,000 என்கிற விலைக்குறைப்பை பெற்றது. தற்போது இது மேலும் ரூ.10,000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது. மொத்தமாக இது ரூ.20000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Indian Fans Be Ready Apple iPhone 15 Series Pre order in India Starts Today Price Where to Book
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X