Home
Mobile

செல்போன் விலையை உயர்த்த முன்னணி நிறுவனங்கள் திட்டம்

By Super
செல்போன் விலையை உயர்த்த முன்னணி நிறுவனங்கள் திட்டம்
இந்தியா மற்றும் சீன மொபைல்களின் விலை விரைவில் அதிகரிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பொருளாதாரத்தில் காணப்படும் ஸ்திரத்தன்மையற்ற போக்கும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கூடி வருவதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்திய நிறுவனமான கார்பன் மொபைலுக்கு, குறைந்த விலை கொண்ட மொபைல்களை கொடுப்பதில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது. கார்பன் நிறுவனம் 7 முதல் 10 சதவிகிதம் விலையை உயர்த்துவதாக முடிவெடுத்திருக்கிறது என்று அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியான ஷஷின் தேவ்சரே கூறியுள்ளார்.

பீட்டல் மேஜிக் டேப்லட்டிற்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிறுவனம் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரை 768 எம்எச்இசட் பிராசஸராகவும் மாற்றியுள்ளது. டாலர்களின் மதிப்பு கூடும்போது குறைந்த விலையில் உயர்ந்த தொழில் நுட்பத்தை வழங்குவது என்பது சாத்தியமாகாது. பெரிய நிறுவனங்களுக்கு தொழில் நுட்பங்களை மேம்படுத்திக் கொள்ளும் அளவிற்கு வசதிகள் உள்ளது.

அதனால் நோக்கியா, சாம்சங் போன்ற நிறுவனங்களை விட இந்திய நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. இந்த நிலை இந்தியாவிற்கு மட்டும் அல்ல, இது போன்ற மற்ற நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சீனாவை சொல்லலாம்.

இந்தியாவில் புதிய மொபைல்களை வெளியிடுவதை, டாலர் உயர்வு காரணமாக தற்போது சீனா நிறுத்தி வைத்துள்ளது. டாலர் உயர்வின் முடிவிற்குப் பிறகுதான் எதையும் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக குறைந்த விலையில் அதிகத் தொழில் நுட்பத்தைக் கொடுக்கவிருக்கும், அனைத்து நிறுவனங்களையும் இந்த பொருளாதார மாற்றம் பாதிக்கும். இது பற்றி இன்னும் சரியான புள்ளிவிவரத்தைப் பெற வேண்டுமென்றால் அதற்கு இன்னும் சிறிது காத்திருக்க வேண்டியிருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X