போட்டு தாக்கு.. ரூ.10,000 க்கு LAVA-வின் புதிய 5G Phone.. 50MP AI கேமரா.. 5000mAh பேட்டரி.. என்ன மாடல்?
இந்தியாவில் பட்ஜெட் விலை 5ஜி போன்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு முக்கிய காரணம் - கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் உள்ள ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்களுக்கு அணுக கிடைக்கும் இலவச 5ஜி டேட்டா சலுகைகள் தான்!
4ஜி திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் 5ஜி கிடைக்கும் என்றால் யார்தான் விடுவார்கள். இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்தி கொள்ள விரும்புவது இந்திய டெலிகாம் பயனர்கள் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளும் தான். இதன் விளைவாகவே இந்திய சந்தையில் தொடர்ச்சியான முறையில் பல பட்ஜெட்-விலை 5ஜி போன்கள் அறிமுகமாகி வருகின்றன.
சுவாரசியமாக சீன நிறுவனங்களுக்கு போட்டியாக இந்திய நிறுவனமான லாவாவும் தொடர்ந்து பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் இன்னொரு புதிய லாவா 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதென்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? லாவாவின் எலேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகமாகப்போவது லாவா யுவா 5ஜி மாடல் தான். எக்ஸ் தளம் வழியாக பகிரப்பட்ட சிறிய வீடியோ வழியாக யுவா 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை லாவா நிறுவனம் உறுதி செய்துள்ளது. குறிப்பிட்ட வீடியோ வழியாக லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போனை இது பற்றிய சில விவரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
என்ன விலை? லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பெரும்பாலான சீன மொபைல் நிறுவனங்கள் குறிவைக்கும் ரூ.10,000 - ரூ.15,000 என்கிற பட்ஜெட்டை லாவா நிறுவனமும் குறிவைத்துள்ளது. முன்னதாக வெளியான லாவாவின் பிற 5ஜி போன்களும் கூட இதே பட்ஜெட்டில் தான் வெளியாகின என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? லாவா பகிர்ந்துள்ள சிறிய வீடியோவின் வழியாக லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் உடனான வட்ட வடிவிலான கேமரா யூனிட்டை தெளிவாக பார்க்க முடிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ரியர் பேனலில் ஏஐ என்கிற வார்த்தையையும் காண முடிகிறது.
ஆக லாவாவின் இந்த புதிய 65ஜி ஸ்மார்ட்போன் ஆனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான சில ஏஐ- அடிப்படையிலான அம்சங்களுடன் வரும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் முன்னதாக வெளியான லாவா யுவா 3 (Lava Yuva 3) ஸ்மார்ட்போனில் நாம் கண்ட பிளாட் எட்ஜ் டிசைனை யுவா 5ஜி மாடலிலும் காண முடிகிறது. மேலும் இது லாவா யுவா 4 ப்ரோ 5ஜி (Lava Yuva 4 Pro 5G) போலவும் கூட தோற்றமளிக்கிறது,
இதுதவிர்த்து வெளியான டீஸர் வீடியோவில் லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போனின் க்ரீன் கலர் வேரியண்ட்டையும் காண முடிகிறது. ஆனால், இது ஒரே ஒரு கலர் ஆப்ஷனில் அறிமுகமாக இருக்க வாய்ப்பில்லை மற்றும் லாவா நிறுவனமானது இன்னும் சில கலர் ஆப்ஷன்களையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து டீஸர் வீடியோ வழியாக வேறு எந்த விவரங்களும் வெளிப்படுத்தவில்லை, ஆனால் லாவா
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம், மேலும் 50எம்பி ஏஐ மெயின் கேமராவுடன் 2-மெகாபிக்சல் செகண்டரி கேமரா பேக் செய்யப்படலாம். சிப்செட்டை பொறுத்தவரை, லாவா யுவா 5ஜி மாடலானது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) அல்லது டைமன்சிட்டி 6080 சிப்செட்டை (Dimensity 6080 SoC) பேக் செய்ய
லாம்.
பேட்டரியை பொறுத்தவரை லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சார்ஜிங் ஸ்பீட் மற்றும் டிஸ்பிளே விவரங்கள் தற்போது வரை மறைக்கப்பட்டுள்ளன, ஆனால் மற்ற லாவா ஸ்மார்ட்போன்களை போலவே இதுவும் ஒரு பெரிய டிஸ்பிளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சாம்சங்-ஐ போலல்லாமல் லாவா அதன் ஸ்மார்ட்போனுடன் சார்ஜரையும் இணைக்கும்.


Click it and Unblock the Notifications








