Home
Mobile

சைனீஸ் கம்பெனிகளை நூடுல்ஸ் போட்ட இந்திய நிறுவனம்.. ரூ.8000 பட்ஜெட்டில் இப்படி ஒரு 5G போன்-ஆ!

ரூ.10,000 க்குள் என்கிற விலை பிரிவில் உள்ள பெரும்பாலான சைனீஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை காலி செய்யும் படியாக.. இந்திய மொபைல் பிராண்ட் ஆன லாவா, ரூ.8000 ஐ சுற்றிய பட்ஜெட்டில் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

அது லாவா ஷார்க் 2 5ஜி (Lava Shark 2 5G) ஸ்மார்ட்போனாகும். லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போனிற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து அதன் அப்கிரேடட் வெர்ஷன் ஆக வரும் லாவா ஷார்க் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.8000 பட்ஜெட்டில் இப்படி ஒரு 5G போன்-ஆ!

அறிமுகத்திற்கு முன்னதாக, லாவா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. அதன் வழியாக இது 6.75 இன்ச் என்கிற அளவிலான பெரிய பேனலை கொண்டிருக்கும் என்பதும், இந்த டிஸ்பிளே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான எச்டி பிளஸ் ரெசல்யூஷனை ஆதரிக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த டீஸர் போட்டோவில் செல்பீ கேமராவிற்காக, டிஸ்பிளேவில் ஒரு ஹோல்-பஞ்ச் கட்அவுட் இருப்பதையும் காண முடிகிறது. முன்னதாக, லாவா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் - பிளாக் மற்றும் சில்வர் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகும் என்பதை வெளிப்படுத்தி இருந்தது . இருப்பினும் சரியான "பெயர்கள்" இன்னும் வெளியிடப்படவில்லை.

லாவா ஷார்க் 2 5ஜி ஸ்மார்ட்போனானது பளபளப்பான ரியர் டிசைனை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. பேக் பேனலின் மேல் இடது மூலையில் ஒரு சதுர வடிவிலான கேமரா யூனிட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் லாவா போல்ட் என்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் நாம் பார்த்த அதே கேமரா டிசைனை காண முடிகிறது. ஆக இதில் 50 மெகாபிக்சல் ஏஐ கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை நாம் எதிர்பார்க்கலாம்.

மேலும் லாவா ஷார்க் 2 5ஜி ஸ்மார்ட்போனின் டீஸர் படங்களின்படி, இந்த ஸ்மார்ட்போனின் இடது பக்கத்தில் சிம் ட்ரே ட்ரேவிற்கான ஸ்லாட் இருப்பதாக தெரிகிறது, அதே நேரத்தில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் வலது பக்கத்தில் அமைந்துள்ளன. முந்தைய டீஸர்கள் ஸ்பீக்கர் கிரில், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் கீழே ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

லாவா ஷார்க் 2 ஸ்மார்ட்போனின் பல முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் அதன் வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் அதுகுறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். விலையை பொறுத்தவரை இது ரூ.8000 - ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். ஏனென்றால் லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது.

கடந்த மே மாதம் லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 20:9 ரேஷியோ
- 6.75-இன்ச் எச்டி பிளஸ்
- ஆக்டா-கோர் 6என்எம் யுனிசாக் டி765 சிப்செட்
- 4ஜிபி ரேம்
- 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 4ஜிபி விர்ச்சுவல் ரேம்

- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்
- ஏஐ ஆதரவு கொண்ட 13 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட்
- குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை சென்சார்
- எல்இடி ஃபிளாஷ் யூனிட்
- 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- 18W வயர்டு சார்ஜிங் ஆதரவு (ஆனால் பாக்ஸில் 10W சார்ஜர் தான் இடம்பெறும்)
- 5000mAh பேட்டரி
- ஐபி54 ரேட்டிங் தூசி மற்றும் ஸ்பிளாஸ்-எதிர்ப்பு கட்டமைப்பு
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி VoLTE, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக்
- அளவீட்டில் 168.04×77.8×8.2மிமீ
- எடையில் 200 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian Brand LAVA to Launch New 5G Phone Lava Shark 2 5G Soon Expected Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X