2020-ம் ஆண்டு முதல் இந்திய எல்லைப்பாதுகாப்பு பணிகளில் நவீன ரோபோக்கள்.!

வரும் 2020-ல் ரோபோக்கள், பயன்பாட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படும் எனவும் தகவல் வெளிவந்துள்ளது

|

தற்சமயம் வெளிவந்த தகவல் என்னவென்றால், வரும் 2020-ம் ஆண்டில் ரோபோக்கள் எல்லை பாதுகாப்பு பணி பயன்பாட்டு உள்ளாக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பாதுகாப்புத்துறை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு
பகுதியாக, எல்லைப்பாதுகாப்பு பணிகளில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோக்களை ஈடுபடுத்தும் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

2020-ம் ஆண்டு முதல் இந்திய எல்லைப்பாதுகாப்பு பணிகளில் நவீன ரோபோக்கள்.!

பின்பு இதற்குவேண்டி பாதுகாப்புத்துறை, பெல் நிறுவனம், மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய அமைப்புகளின் விஞ்ஞானிகளின் இந்த ரோபோ வடிவமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

பெல் நிறுவன அதிகாரி

பெல் நிறுவன அதிகாரி

மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் வடிவமைப்பு பணிகள் ஒரு வருடத்திற்குள் முடிவடைந்தது. பின்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரோபோக்களின் மாதிரிகள் வெளியிடப்படும் என பெல் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

70-லட்சம் ரூபாய்

70-லட்சம் ரூபாய்

வரும் 2020-ல் ரோபோக்கள், பயன்பாட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படும் எனவும் தகவல் வெளிவந்துள்ளது, பின்பு இந்த ரோபோக்கள் ஒன்றுக்கு 70-லட்சம் ரூபாய் முதல் 80 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விலை படிப்படியாக குறைய வாய்யப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 செயற்கை நுண்ணறிவு திறன்

செயற்கை நுண்ணறிவு திறன்

தற்போது செயற்கை நுண்ணறிவு திறன் (ஏஐ) என்பது வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பம் என்பதால், பல்வேறு பெரிய நிறுவனங்களும் கச்சிதமான ஏஐ அமைப்பை வடிவமைக்கும் வகையில், இந்தப் புதிய துறைக்குள் தடம்பதிக்க ஆரம்பித்துள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள ஏஐ-யில் கூட, எதிர்கால மனித சமுதாயத்திற்கு பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

நரம்பியல் மற்றும் மனநிலை

நரம்பியல் மற்றும் மனநிலை

பிரபலமான நரம்பியல் அறிஞரான சாக்காரி மெயினின் கூறுகையில், இன்று மனிதர்களுக்கு ஏற்படுவது போல எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு திறனுக்கு கூட நரம்பியல் மற்றும் மனநிலைத் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் மனிதர்களுக்கு ஒத்த அறிவு நிலைக்கு செயற்கை நுண்ணறிவு திறன் எட்டும் போது மட்டுமே இது போன்ற நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

மூளை எப்படி வேலைச் செய்கிறது

மூளை எப்படி வேலைச் செய்கிறது

இதற்கு மனித மூளை எப்படி வேலைச் செய்கிறது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதில் பெரிய அளவிலான மாறுபட்ட காரியங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் மனித மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் சிறிய அளவிலான மாற்றம் கூட மனஅழுத்தம், மறதிகள், மாயத்தோற்றம் போன்ற மனித மூளைக்கு ஆரோக்கியம் இல்லாத தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்.

உளவியல் அறிஞர்களால் அவை ஆராயப்பட்டு வருகின்றன

உளவியல் அறிஞர்களால் அவை ஆராயப்பட்டு வருகின்றன

செயற்கை நுண்ணறிவைச் சொந்தமாக மாற்றியமைத்து கொள்ளும் குறியீடுகளின் பண்புகள் கூட, நரம்பியல் கூட்டிணைப்புகளை அடிப்படையாக கொண்டவை என்பதால், உளவியல் சூழ்நிலைகளுக்கு ஒத்த பிரச்சனைகளை அவை சந்திக்கக் கூடும் என்று நரம்பியல் அறிஞர் மெயினின் நம்புகிறார். இது குறித்து அவர் கூறுகையில், மேற்கூறிய காரியங்களில் பெரும்பாலானவற்றை கணக்கீட்டு உளவியல் என்று அழைக்கப்படும் ஆய்வுத் துறையில் இருந்து பெற்றவை ஆகும். ஏனெனில், மனித மூளையைப் பயன்பாட்டிற்கு ஒத்த சூழ்நிலைகளில் செயற்கை நுண்ணறிவு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதால், உளவியல் அறிஞர்களால் அவை ஆராயப்பட்டு வருகின்றன, என்றார்.

மனஅழுத்தம்

மனஅழுத்தம்

இது குறித்து மெயினின் விளக்கும் போது, மனித மூளைக்குள் இருக்கும் சிரோடோனின் என்ற ஒரு வேதிப்பொருளில் சற்று பிழை ஏற்பட்டாலும், மனஅழுத்தம் என்ற மாயத்தோற்றத்தின் அடையாளத்தைக் காட்ட ஆரம்பித்து விடுகிறது. மனித மூளையின் செயல்பாட்டை மையமாக கொண்ட நியூரோகெமிஸ்ட்ரியை (நரம்பியவேதியியல்) பயன்படுத்தி செயல்படும் செயற்கை நுண்ணறிவுக்கும், இதே போன்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இது அறிவியல் ரீதியான கற்பனையைப் போல தெரிந்தாலும், இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூற முடியாது. ஆம், மனித மூளையின் செயல்பாட்டிற்கு ஒத்த நிலையை செயற்கை நுண்ணறிவு அடையும் போது, இது போன்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
India working on robots that may patrol borders : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X