அடிச்சு புடிச்சு வாங்கிய இந்தியர்கள்.. ஒரே நாளில் 60000 யூனிட்கள் விற்பனை.. இந்த Realme போனில் என்ன ஸ்பெஷல்?
"ஆஹா.. ஆரம்பமே அதிரடியா இருக்கே!" என்று கூறும்படியாக, சமீபத்தில் இந்திய மொபைல் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி (Realme) நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றானது, முதல் நாள் விற்பனையிலேயே 60,000 யூனிட்களை (Units) விற்று புதிய சாதனை படைத்து உள்ளது.
நாம் இங்கே பேசுவது, இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 11 Pro Plus 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். அறிமுக நிகழ்வில் அறிவிக்கப்பட்டது போலவே, இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை ஜூன் 15 ஆம் தேதி முதல் தொடங்கியது.

பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைத்த இந்த ஸ்மார்ட்போனின் முதல் நாள் விற்பனை (First Day Sale) மிகவும் அமோகமாக இருந்தது என்றும், முதல் நாளிலேயே ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 60,000 யூனிட்கள் விற்பனையானதாகவும் ரியல்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரியல்மியின் கூற்றுப்படி, ரூ.25,000 விலை பிரிவில் இது நிறுவனத்தின் அதிகபட்ச முதல்-விற்பனை சாதனையாகும்!
ரியல்மி வழியாக கிடைத்துள்ள இந்த புள்ளிவிவரமானது, சந்தேகத்திற்கு இடமின்றி ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் மீது இந்தியர்களுக்கு இருந்த 'ஹைப்' மற்றும் எதிர்பார்ப்பை அப்பட்டமா பிரதிபலிக்கின்றன. ஒரே நாளில் 60,000 யூனிட்கள் விற்பனையானகி உள்ளதென்றால் இந்த போனில் அப்படி என்ன ஸ்பெஷல்?
முதல் மற்றும் முக்கிய காரணம் - பார்ப்பவர்களின் ஆர்வத்தை தூண்டும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் பேக் டிசைன் (Back Design) தான். இது பிரீமியம் ஃபாக்ஸ் லெதர் ஃபினிஷ் (Premium faux leather finish) உடன் வருகிறது. இந்த விலைப்பிரிவில் இப்படியொரு டிஸைன் கிடைத்தால், யார் தான் வாங்காமல் இருப்பார்கள்.
இரண்டாவது காரணம் - இந்த ஸ்மார்ட்போன் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை (Curved AMOLED Display) கொண்டுள்ளது. மூன்றாவது காரணம் - ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலானது மொபைல் போட்டோகிராஃபி பிரியர்களை ஈர்க்கக்கூடிய 200எம்பி மெயின் கேமராவை (200MP Main Camera) கொண்டுள்ளது. கடைசியாக - இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் (Fast Charging Support) வருகிறது.
இதெல்லாம் ரூ.27,999 க்கு கிடைத்தால் இந்தியர்கள் விடுவார்களா.. 60,000 யூனிட்களை ஆர்டர் போட்டு ரியல்மி நிறுவனத்தை திக்குமுக்காட செய்து விட்டனர். ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் 6.7 இன்ச் ஃபுல் எச்டி+ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ரியல்மி யுஐ 4.0 உடன் வரும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது, செயல்திறன் மிக்க டைமன்சிட்டி 7050 (Dimensity 7050) சிப்செட்சி மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் 8 ஜிபி அல்லது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் வழங்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, 200 மெகாபிக்சல் சாம்சங் ஐசோசெல் எச்எம்3 மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் + 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதுதவிர்த்து மேம்படுத்தப்பட்ட ஆடியோ அனுபவத்திற்காக டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், பாதுகாப்பான அன்லாக்கிங்கிற்கான அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் போன்றவைகளையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications