அமோகமான ஆபர்களுடன் iPhone 14, iPhone 14 Pro இந்திய விற்பனை ஆரம்பம்!

|

ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களின் (iPhone 14 சீரிஸின்) இந்திய விற்பனை இன்று (அதாவது 2022 செப்டம்பர் 16 ஆம் தேதி) தொடங்குகிறது.

ஐபோன் 14 சீரீஸ் மாடல்கள் ஆனது அறிமுகம் செய்யப்பட்ட ​​ஒரு வாரம் கழித்து, அதன் கீழ் வெளியான நான்கு ஐபோன் மாடல்களில், இரண்டு மாடல்கள் மட்டுமே இன்று விற்பனைக்கு வர உள்ளன!

அதென்ன மாடல்கள்? சரியாக எத்தனை மணிக்கு விற்பனை தொடங்கும்?

அதென்ன மாடல்கள்? சரியாக எத்தனை மணிக்கு விற்பனை தொடங்கும்?

ஆர்வமுள்ளவர்கள் இன்று மாலை 5:30 மணி முதல் இந்தியாவில் iPhone 14 மற்றும் iPhone 14 Pro மாடல்களை வாங்க முடியும்.

இந்த இரண்டு ஐபோன்களின் விலை நிர்ணயம் என்ன? இவைகளின் மீது அணுக கிடைக்கும் சலுகைகள் என்னென்ன? என்னென்ன கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்?

உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?

iPhone 14-இன் விலை விவரங்கள்:

iPhone 14-இன் விலை விவரங்கள்:

வெண்ணிலா மாடலின் விலையை பொறுத்த வரை, ஐபோன் 14-இன் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,900 க்கும், 256ஜிபி ஆப்ஷன் மற்றும் 512ஜிபி ஆப்ஷன் ஆனது முறையே ரூ.89,900 மற்றும் ரூ.1,09,900 க்கும் வாங்க கிடைக்கும்.

இது நீலம், ஊதா, மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் ப்ராடெக்ட் (ரெட்) போன்ற கலர் ஆப்ஷன்களின் கீழ் விற்பனைக்கு வரும்!

iPhone 14 Pro-வின் விலை விவரங்கள்:

iPhone 14 Pro-வின் விலை விவரங்கள்:

மறுகையில் உள்ள ப்ரோ மாடலான, ஐபோன் 14 ப்ரோவின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.1,29,900 க்கும், 256ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.1,39,900 க்கும், அதே சமயம் 512ஜிபி மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் ஆனது முறையே ரூ.1,59,900 மற்றும் ரூ.1,79,900 க்கும் வாங்க கிடைக்கும்.

இது டீப் பர்பிள், கோல்ட், சில்வர் மற்றும் ஸ்பேஸ் பிளாக் போன்ற கலர் ஆப்ஷன்களின் கீழ் விற்பனைக்கு வரும்!

விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?

Apple Online Store வழியாக அணுக கிடைக்கும் சலுகைகள்:

Apple Online Store வழியாக அணுக கிடைக்கும் சலுகைகள்:

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ரூ.54,900 க்கு மேல் ஆர்டர் செய்தால், HDFC கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு ரூ.6,000 என்கிற இன்ஸ்டன்ட் கேஷ்பேக்கை பெறலாம்.

மேலும் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை புதிய ஐபோன் 14 அல்லது ஐபோன் 14 ப்ரோ மாடல்களுடன் எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் ரூ.46,120 வரை சேமிக்கலாம்.

Flipkart வழியாக அணுக கிடைக்கும் சலுகைகள்:

Flipkart வழியாக அணுக கிடைக்கும் சலுகைகள்:

பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான Flipkart-இல் கிடைக்கும் சலுகைகளை பொறுத்தவரை, நீங்கள் HDFC பேங்கின் கிரெடிட் நான்-இஎம்ஐ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு இஎம்ஐ விருப்பங்கள் கீழ் iPhone 14 Pro-வை வாங்கினால் ரூ.4,000 என்கிற தள்ளுபடி கிடைக்கும்..

அதேபோல ஐபோன் 14-ஐ வாங்கினால் ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர்த்து Flipkart Axis பேங்க் கார்ட்டை பயன்படுத்தினால் ஐந்து சதவீத கேஷ்பேக் கிடைக்கும்!

iPhone 14 அறிமுகமான வேகத்தில் iPhone 13 மீது நம்ப முடியாத Price Cut!iPhone 14 அறிமுகமான வேகத்தில் iPhone 13 மீது நம்ப முடியாத Price Cut!

iPhone 14 Pro-வின் முக்கிய அம்சங்கள்:

iPhone 14 Pro-வின் முக்கிய அம்சங்கள்:

- 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளே
- ப்ரோமோஷன் டெக்னாலஜி
- ஆல்வேஸ் ஆன்-டிஸ்ப்ளே
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 48MP + 12MP அல்ட்ரா-வைட் + 12MP டெலிஃபோட்டோ கேமரா
- 12MP ட்ரூடெப்த் கேமரா
- A16 பயோனிக் சிப்செட்
- 1TB வரை ஸ்டோரேஜ்

iPhone 14-இன் முக்கிய அம்சங்கள்:

iPhone 14-இன் முக்கிய அம்சங்கள்:

- 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 12MP + 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- 12MP ட்ரூடெப்த் கேமரா
- A15 பயோனிக் சிப்செட்
- 512GB வரை ஸ்டோரேஜ்.

Photo Courtesy: Apple

Best Mobiles in India

English summary
India Sale of iPhone 14, iPhone 14 Pro Today 5.30 PM September 16 Check Apple Online Store Flipkart Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X