கம்மி காசுக்கு "இந்த" போனை வாங்கி எல்லாரும் 5G-க்கு மாறப்போறாங்க.! நீங்க வாங்கலயா?

|

இந்தியாவில் இப்போது எங்குத் திரும்பினாலும் 5ஜி பற்றி தான் பேச்சாக இருக்கிறது. "உங்க போன்ல 5ஜி இருக்கா? உங்க போன் 5ஜி சப்போர்ட் பண்ணுமா?" என்று மக்கள் கடந்த மாதம் முதல், மாறி - மாறி அதிகமாகக் கேட்டுக்கொண்ட கேள்வி இதுவாக தான் இருக்கிறது.!

கேள்வி என்னவாக இருந்தாலும், 5ஜி சேவையின் வேகத்தின் ட்ரை செய்து பார்க்க வேண்டும் என்பதில் மக்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

5ஜி போன்களுக்கான வியாபாரம் இந்தியாவில் சூடுபிடிக்கிறது.!

5ஜி போன்களுக்கான வியாபாரம் இந்தியாவில் சூடுபிடிக்கிறது.!

5ஜி சேவையை பயன்படுத்த 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருப்பதனால், 5ஜி போன்களுக்கான வியாபாரம் இந்தியாவில் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

ஆனால், தற்போதைய சூழ்நிலையில் ஒரு புது 5ஜி ஸ்மார்ட்போன் டிவைஸை நாம் வாங்க வேண்டும் என்றால், அவை பட்ஜெட்டில் எகிறிவிடுகிறது.! இனி நிலைமை இப்படி இருக்கப் போவதில்லை.! காரணம் Lava நிறுவனம் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.

"இந்த" போனை வாங்கி எல்லாரும் 5G-க்கு மாறப்போறாங்க.!

நாளை முதல் இந்தியாவில் பெரும்பாலானோர் 5ஜி நோக்கி வேகமாகப் படையெடுக்கப் போகிறார்கள். ஆம், மலிவு விலையில் Lava நிறுவனம் அதன் Blaze சீரிஸ் வரிசையில் புதிய 5G ஸ்மார்ட்போன் சாதனத்தை நாளை முதல் இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது.

லாவா நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த புது Lava Blaze 5G என்ற ஸ்மார்ட்போன் மாடலை, நாளை முதல் விற்பனை செய்ய துவங்குகிறது. இதன் விலை ரூ.10,000-க்குள் இருக்கும் என்பதே சிறப்பு.

சிலருக்கு மட்டும் ரூ.4949 விலையில் Samsung Galaxy M33 5G வாங்க வாய்ப்பு.! அந்த ஒரு சிலர் நீங்களா?சிலருக்கு மட்டும் ரூ.4949 விலையில் Samsung Galaxy M33 5G வாங்க வாய்ப்பு.! அந்த ஒரு சிலர் நீங்களா?

இந்தியாவின் மிகவும் மலிவு விலை 5G போன்-ஆ! இது?

இந்தியாவின் மிகவும் மலிவு விலை 5G போன்-ஆ! இது?

ஆம், வெறும் ரூ.10,000 விலைக்குள் தான் லாவா நிறுவனம் இந்த புதிய Lava Blaze 5G ஸ்மார்ட்போன் மாடலை விற்பனை செய்யவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் Lava Blaze 5G ஆனது கடந்த மாதம் இந்தியா மொபைல் காங்கிரஸ் 2022 நிகழ்வின் போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது இந்தியாவின் மிகவும் மலிவு விலை 5G போன் என்று கூறப்படுகிறது. அமேசான் வழியாக இந்தியாவில் இந்த சாதனத்தை நிறுவனம் விற்பனை செய்யும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.

Lava Blaze 5G போனின் முதல் விற்பனை எப்போது? எங்கிருந்து வாங்கலாம்?

Lava Blaze 5G போனின் முதல் விற்பனை எப்போது? எங்கிருந்து வாங்கலாம்?

இந்த Lava Blaze 5G போனின் விற்பனை வரும் நவம்பர் 3 ஆம் தேதி (நாளை) தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது.

மலிவு விலையில், இந்த ஸ்மார்ட்போன் உண்மையிலேயே சிறப்பான டீசென்ட் அம்சங்களை பேக் செய்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்த போனில் என்ன முக்கியமான அம்சங்கள் இருக்கிறது என்று குயிக் ஆகப் பார்க்கலாம்.

ஃபாஸ்ட் சார்ஜிங் Power Bank வெறும் ரூ.549 மட்டுமே.! விட்டா திரும்ப கிடைக்காது பாஸ்.!ஃபாஸ்ட் சார்ஜிங் Power Bank வெறும் ரூ.549 மட்டுமே.! விட்டா திரும்ப கிடைக்காது பாஸ்.!

Lava Blaze 5G ஸ்மார்ட்போன் குயிக் ஸ்பெக்ஸ் விபரம்

Lava Blaze 5G ஸ்மார்ட்போன் குயிக் ஸ்பெக்ஸ் விபரம்

இந்த Lava Blaze 5G ஸ்மார்ட்போன் 6.5' இன்ச் அளவு கொண்ட HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது. இதில் செல்ஃபி ஸ்னாப்பருக்கான வாட்டர் டிராப் நாட்ச் உடன் இந்த டிவைஸ் வருகிறது. இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இது 7nm ஃபேப்ரிகேஷன் செயல்முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பரவலான ஸ்பெக்ஸ்களை இந்த சாதனம் பேக் செய்துள்ளது. அதுபற்றி விரிவாகப் பார்க்கலாம்.

Lava Blaze 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Lava Blaze 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Lava Blaze 5G ஆனது 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 1600 × 720 பிக்சல்கள் உடைய 6.5' இன்ச் HD+ LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த சாதனம் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்செட் மூலம் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

இந்த டிவைஸ் 3ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் மைக்கோ எஸ்டி கார்டு அம்சத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.10,000 விலைக்குள் விர்ச்சுவல் ரேம் கிடைப்பது சிறப்பானது.

Lava Blaze 5G கேமரா மற்றும் பேட்டரி அம்சத்தின் விபரங்கள்.!

Lava Blaze 5G கேமரா மற்றும் பேட்டரி அம்சத்தின் விபரங்கள்.!

இந்த டிவைஸ் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஸ்டாண்டர்ட் சார்ஜிங் வேகத்தைக் கொண்டிருக்கும். Lava Blaze 5G ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி சென்சார் கொண்ட ட்ரிபிள் கேமரா அம்சத்துடன் வருகிறது.

இதில் டெப்த் ஷூட்டர் மற்றும் மேக்ரோ லென்ஸ் அடங்கும். முன்பக்கத்தில், 8MP செல்பி ஸ்னாப்பர் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 OS இல் இயங்குகிறது.

இந்த Oppo அல்லது OnePlus போன் உங்ககிட்ட இருக்கா? அப்போ உடனே 5G யூஸ் பண்ணலாம்.!இந்த Oppo அல்லது OnePlus போன் உங்ககிட்ட இருக்கா? அப்போ உடனே 5G யூஸ் பண்ணலாம்.!

Lava Blaze 5G தான் இனி மலிவு விலை 5G போனா?

Lava Blaze 5G தான் இனி மலிவு விலை 5G போனா?

இணைப்பு அம்சங்களில் 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS மற்றும் USB Type-C போர்ட் போன்றவற்றை இது ஆதரிக்கிறது. இந்தியாவில் Lava Blaze 5G விலை சுமார் ரூ.10,000 என்ற விலை வரம்பிற்குள் இருக்கும் என கூறப்படுகிறது.

இது ப்ளூ மற்றும் க்ரீன் வண்ண விருப்பங்களில் வரும். இந்த மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் தீபாவளிக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அது நடக்கவில்லை. இதற்குப் பதிலாக நாளை முதல் விற்பனைக்கு வாங்கக் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
India’s Most Affordable 5G Phone Lava Blaze 5G Goes On Sale In India From November 3

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X