'மயக்கம் என்ன' தனுஷ் ஆகனுமா?- கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, இந்த Phone உங்களுக்கு தான்!

|

மோட்டோரோலாவின் ஃபிளாக்ஷிப் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் குறித்து தான் பார்க்கப்போகிறோம். தங்களது போட்டோகிராஃபிக் திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்ட காட்டத் துடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் வரப்பிரசாதமாக இந்த ஸ்மார்ட்போன் அமையப் போகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஃப்ரொபஷனல் கேமரா தரத்தில் புகைப்படம்

ஃப்ரொபஷனல் கேமரா தரத்தில் புகைப்படம்

போட்டோகிராஃபி துறையில் ஆர்வம் உள்ள ஒவ்வொருவருக்கும் மயக்கம் என்ன திரைப்பட தனுஷ் போல் விருது வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் அனைவராலும் ஃப்ரொபஷனல் கேமரா வாங்க முடியாது. ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுத்தாலும் அது அத்தனை தெளிவாக இருப்பதில்லை.

இதை பூர்த்தி செய்யும் வகையில் ஃப்ரொபஷனல் கேமரா தரத்திற்கு இணையான சென்சார் உடன் மோட்டோவின் புது ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது.

ஆம், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிலான அதிக மெகாபிக்சல் கேமராவுடன் ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது.

ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC சிப்செட் ஆதரவு

ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC சிப்செட் ஆதரவு

மோட்டோ நிறுவனம் மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சாம்சங், ஒன்பிளஸ், விவோ போன்ற நிறுவனங்களின் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களிலும் இதே சிப்செட் தான் பொருத்தப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

முதல் 200MP கேமரா ஸ்மார்ட்போன்

முதல் 200MP கேமரா ஸ்மார்ட்போன்

முன்னதாக குறிப்பிட்டது போல் மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் இருக்கிறது.அது இந்த ஸ்மார்ட்போனின் கேமரா தான்.

ஆம் இந்த ஸ்மார்ட்போனில் 200MP கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

200MP கேமரா உடன் இந்தியாவில் அறிமுகமாகும் பட்சத்தில் இதுதான் இந்தியாவின் முதல் 200MP கேமரா ஸ்மார்ட்போனாக இருக்கும்.

செப்டம்பர் 8 ஆம் தேதி அறிமுகமா?

செப்டம்பர் 8 ஆம் தேதி அறிமுகமா?

மோட்டோரோலா நிறுவனம் செப்டம்பர் 8 ஆம் தேதி மோட்டோரோலா எட்ஜ் அல்ட்ராவை அறிமுகப்படுத்த இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பக்கா ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக களமிறங்க இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த ஸ்மார்ட்போனில் வேற என்ன எதிர்பார்க்கலாம் என்று பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா சிறப்பம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா சிறப்பம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்பார்க்கலாம் என்று பார்க்கலாம் வாங்க.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது 6.55-இன்ச் OLED டிஸ்ப்ளே உடன் வெளியாகலாம். இந்த டிஸ்ப்ளே ஆனது 144Hz ரெஃப்ரஷிங் ரேட், FHD+ ஆதரவோடு 3D வடிவ வளைந்த டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ப்ரீமியம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களை போன்றே இந்த ஸ்மார்ட்போனும் டிஸ்ப்ளே மையத்தில் பஞ்ச் ஹோல் வசதியையும், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆதரவையும் கொண்டிருக்கிறது.

00 எம்பி பிரைமரி வைட்-ஆங்கிள் கேமரா

00 எம்பி பிரைமரி வைட்-ஆங்கிள் கேமரா

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

இதில் 200 எம்பி பிரைமரி வைட்-ஆங்கிள் கேமராவுடன் 50 எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே சென்சார் மேக்ரோ லென்ஸாகவும் செயல்படும் என கூறப்படுகிறது.

அதேபோல் 2x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் கூடிய 12MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆதரவும் இதில் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

125W ஃபாஸ்ட் வயர்ட் சார்ஜிங்

125W ஃபாஸ்ட் வயர்ட் சார்ஜிங்

125W ஃபாஸ்ட் வயர்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4,610mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் TWS மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் போன்றவைகளை சார்ஜ் செய்ய இயலும்.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா விலை என்ன?

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா விலை என்ன?

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா சமீபத்தில் சீனாவில் மோட்டோரோலா எக்ஸ்30 ப்ரோவாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் அறிவிக்கப்பட்டது. இதன் விலை CNY 3,699 ஆகும். அதாவது இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு தோராயமாக ரூ.44,000 ஆகும்.

Best Mobiles in India

English summary
India's First 200MP Camera Smartphone: Its might be the Motorola Edge 30 Ultra

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X