Home
Mobile

ஆசையை கிளப்பும் இந்திய விலை நிர்ணயம்.. ஆகஸ்ட் 11 முதல் விற்பனை.. Samsung-ன் புதிய ஃபோல்ட் 5, ஃபிளிப் 5!

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எதிர்பார்த்தபடியே இவ்விரு ஸ்மார்ட்போன்களும் நேற்று (ஜூலை 26) தென் கொரியாவில் நடந்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வின் போது அறிமுகம் செய்யப்பட்டன.

தற்போது இவ்விரு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் என்ன? கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 (Galaxy Z Fold 5) மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 (Galaxy Z Flip 5) ஆகிய இரண்டும் எப்போது முதல் விற்பனைக்கு வரும்? என்கிற விவரங்களை சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Samsung-ன் புதிய ஃபோல்ட் 5, ஃபிளிப் 5: இந்திய விலை நிர்ணயம்!

கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 இந்திய விலை நிர்ணயம்: 12ஜிபி ரேம் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 3 வகையான இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.1,54,999 என்றும், 512ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.1,64,999 என்றும், 1டிபி வேரியண்ட்டின் விலை ரூ.1,84,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 இந்திய விலை நிர்ணயம்: 8ஜிபி ரேம் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 2 வகையான இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.99,999 என்றும், 512ஜிபிவேரியண்ட்டின் விலை ரூ.1,09,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு வகையான கலர் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இவ்விரு சாம்சங் ஸ்மார்ட்போன்களின் ப்ரீ-ஆர்டர்களும் - ஜூலை 26 முதல் - ஏற்கனவே தொடங்கி விட்டன. சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும்.

கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5, கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 முக்கிய அம்சங்கள்: கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனின் மெயின் டிஸ்பிளே 7.6-இன்ச் QXGA+ (2176 x 1812 பிக்சல்ஸ்) டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் பேனலுடன் வருகிறது; அவுட்டர் ஸ்க்ரீன் ஆனது 6.2-இன்ச் ஃபுல் எச்டி+ டிஸ்பிளேவாக உள்ளது.

மறுகையில் உள்ள கேலக்ஸி இசட் ஃப்ளிப் 5 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி+ (1080 x 2640 பிக்சல்ஸ்) டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதனுடன் 3.4-இன்ச் சூப்பர் AMOLED ஃபோல்டர் ஷேப்டு கவர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த இரண்டு போன்களுமே கேலக்ஸிக்கான கஸ்டம் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

மறுகையில் உள்ள கேலக்ஸி இசட் ஃப்ளிப் 5 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி+ (1080 x 2640 பிக்சல்ஸ்) டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதனுடன் 3.4-இன்ச் சூப்பர் AMOLED ஃபோல்டர் ஷேப்டு கவர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த இரண்டு போன்களுமே கேலக்ஸிக்கான கஸ்டம் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 ஆனது 12ஜிபி ரேம் உடன் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. மறுகையில் உள்ள கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஆனது 8ஜிபி ரேம் உடன் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. மேலும் இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ஒன்யுஐ 5.1.1 (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) மூலம் இயங்குகின்றன.

கேமராக்களை பொறுத்தவரை, கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. அதில் வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 50 மெகாபிக்சல் சென்சார் + அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 12 மெகாபிக்சல் சென்சார் + டெலிஃபோட்டோ லென்ஸை கொண்ட 10 மெகாபிக்சல் சென்சார் உள்ளன

இதுதவிர்த்து கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனின் அவுட்டர் டிஸ்பிளேவின் மேற்புறத்தில் உள்ள பஞ்ச்-ஹோல் ஸ்லாட்டில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான 10-மெகாபிக்சல் சென்சார் உள்ளது. அதுமட்டுமல்ல கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5-ன் இன்னர் பேனலின் கீழே 4-மெகாபிக்சல் அண்டர் டிஸ்பிளே கேமரா ஒன்றும் உள்ளது.

மறுகையில் உள்ள கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஆனது டூயல் 12 மெகாபிக்சல் ரியர் கேமரா சென்சார்களை கொண்டுள்ளது மற்றும் 10 மெகாபிக்சல் செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 ஆனது 25W வயர்டு, ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் ஆதரவுடன் 4,400எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஆனது கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5-இல் உள்ள அதே சார்ஜிங் திறன்களுடன், அதாவது 25W வயர்டு, ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் ஆதரவுடன் வருகிறது. ஆனால் சற்றே சிறிய 3,700எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
India Pricing of Samsung Galaxy Z Fold 5 Galaxy Z Flip 5 Announced Pre Book Started Sale From August 11
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X