Home
Mobile

Samsung-ன் திடீர் தள்ளுபடி! விற்பனையில் நம்பர் 1-ல் இருக்கும் 5G Phone மீது பலே OFFER.. என்ன மாடல்? என்ன விலை?

சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் பெஸ்ட்-செல்லிங் 5ஜி போனின் (Best-selling 5G Phone) மீது புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதென்ன மாடல்? இதன் மீது என்ன சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது? சலுகைக்கு பிறகான புதிய விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்சி ஏ14 5ஜி (Samsung Galaxy A14 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்சின் (Counterpoint Research) படி இதுதான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 5ஜி ஸ்மார்ட்போன் (India's No.1 Selling 5G Smartphone) ஆகும்.

விற்பனையில் நம்பர் 1-ல் இருக்கும் Samsung 5G Phone மீது பலே OFFER!

சலுகை விலை என்ன? சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனின் மீது ரூ.1000 கேஷ்பேக் சலுகையை (Cashback Offer) அறிவித்து உள்ளது. சுவாரசியமாக இந்த சலுகை கேலக்ஸி ஏ4 5ஜி-யின் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

இந்த சலுகைக்கு பிறகு, சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷன் தற்போது ரூ.13499 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலை ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) வழியாக கிடைக்கும் ரூ.1000 கேஷ்பேக்கை உள்ளடக்கிய விலையாகும்.

விற்பனையில் நம்பர் 1-ல் இருக்கும் Samsung 5G Phone மீது பலே OFFER!

இதேபோல சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் ஸ்டோர்ஸ் (Samsung Stores), சாம்சங்.காம் (Samsung.com) மற்றும் பிற ஆன்லைன் தளங்கள் வழியாக வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) அடிப்படையிலான ஒன் யுஐ 5.0 (One UI 5.0) கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 1080 x 2408 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) உடனான 6.6-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை (LCD Display) கொண்டுள்ளது.

விற்பனையில் நம்பர் 1-ல் இருக்கும் Samsung 5G Phone மீது பலே OFFER!

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் (MediaTek Dimensity 700 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது. கூடவே மைக்ரோ எஸ்டி ஸ்லாட் (Micro SD Slot) வழியாக 1டிபி வரை மெமரியை விரிவாக்கக்கூடிய ஆதரவும் உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) கொண்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் (எஃப்/1.8) மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் (எஃப்/2.4) மேக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் (எஃப்/2.4) டெப்த் கேமரா உள்ளது.

முன்பக்கத்தில் எஃப்/2.0 அபெர்க்ஷர் உடனான 13 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் மேல் மையத்தில் உள்ள வாட்டர் டிராப் நாட்ச்சில் (Water Drop Notch) உள்ளது. கனெக்டிவிட்டி (Conne) ஆப்ஷன்களை பொறுத்தவரை வைஃபை 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் (GPS), என்எஃப்சி (NFC) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) ஆகியவைகளை கொண்டுள்ளது.

கூடவே அக்ஸலரோமீட்டர், பாரோமீட்டர், ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், கைரோ சென்சார், ஜியோமேக்னடிக் சென்சார், லைட் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார்களையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கும் உள்ளது. இது 15வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு (15W Fast Charging) உடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கடைசியாக அளவீட்டில் இது 167.7 x 78.0 x 9.1மிமீ மற்றும் 204 கிராம் எடையை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
India No 1 Selling 5G Phone Samsung Galaxy A14 5G gets Rs 1000 Cashback Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X