ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
70W ஃபாஸ்ட் சார்ஜிங் + 6000mAh பேட்டரி என்கிற காம்பினேஷனில்.. இந்தியாவில் இப்படி ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். அதென்ன ஸ்மார்ட்போன்? என்ன விலை? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? டெக்னோ நிறுவனம் அதன் போவா சீரிஸின் கீழ் டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி (Tecno Pova 6 Pro 5G) என்கிற மாடலை கடந்த மாதம் பார்சிலோனாவில் அறிமுகம் செய்தது. தற்போது அந்த மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

இது மீடியாடெக் டைமன்சிட்டி 6080 (MediaTek Dimensity 6080) சிப்செட், 12ஜிபி வழக்கமான ரேம் + 12ஜிபி விர்ச்சுவல் ரேம் என மொத்தம் 24ஜிபி ரேம், மைக்ரோஎஸ்டி ஸ்லாட் வழியாக 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், 70W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6000mAh பேட்டரி என "விலையை மீறிய" பல அம்சங்களை கொண்டுள்ளது.
வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? டெக்னோவின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே 2160ஹெர்ட்ஸ் PWM டிம்மிங் மற்றும் லோட் ப்ளூ லைட் உமிழ்வுகளுக்கான TUV ரைன்லேண்ட் சான்றிதழையும் கொண்டுள்ளது.

மேலும் இது 6 என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஐபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜில் இருந்து கூடுதலாக 12ஜிபி விர்ச்சுவல் ரேம்-ஐ கடன் வாங்கி, இந்த ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 24ஜிபி ஆக விரிவாக்க முடியும்.
கேமராக்களை பொறுத்தவரை, இதில் 108 மெகாபிக்சல் மெயின் சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் எல்இடி ஃபிளாஷ் உடனான 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. மேலும், டால்பி அட்மாஸ் ஸ்பேஷியல் சவுண்ட்டிற்கான ஆதரவுடன் வரும் முதல் டெக்னோ ஸ்மார்ட்போனான இதன் பேக் பேனலில் 210 எல்இடிகளுடன் டைனமிக் மினிஎல்இடி லைட்ஸ் செட்டப்பும் உள்ளது.

இதன் மினிஎல்இடி லைட்ஸ் செட்டப்பை, உங்களுக்கு வரும் வாய்ஸ் கால்கள், ஸ்மார்ட்போனின் பவர் ஸ்டேட்டஸ், நீங்கள் விளையாடும் கேம்ஸ் மற்றும் கேட்கும் ம்யூசிக் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ஏற்றபடி கஸ்டமைஸ் செய்யலாம். ஹைஓஎஸ் 14 (HiOS 14) கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஹீட் மேனேஜ்மென்ட்டிற்காக மொத்தம் 2,7342 மிமீ கூலிங் ஏரியா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இ-ஸ்போர்ட்ஸ் ப்ரோ ஆபரேஷன் இன்ஜின் மற்றும் கேமிங்கிற்கான 4டி வைப்ரேஷன் சென்ஸும் அடங்கும்.
பேட்டரியை பொறுத்தவரை இது 70W சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. டெக்னோவின் கூற்றுப்படி , இது வெறும் 20 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 50% க்கும், 50 நிமிடங்களில் 100% க்கும் பேட்டரியை சார்ஜ் செய்யும், மேலும் சிங்கிள் சார்ஜில் 11 மணி நேர கேமிங், 14 மணிநேர வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் 31 மணி நேர காலிங் டைமை வழங்கும்.
என்ன விலை? எப்போது முதல் விற்பனை? டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கொமட் க்ரீன் (Comet Green) மற்றும் மீட்யராய்ட் க்ரே (Meteorite Gray) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.21,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் அறிமுக சலுகையாக டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மீதும் ரூ.2000 பேங்க் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை ரூ.17,999 ஆகவும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் விலையை ரூ.19,999 ஆகவும் குறைக்க முடியும். இரண்டுமே ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் அமேசான் இந்தியா வலைத்தளம் (Amazon.in) வழியாக விற்பனைக்கு வரும்!


Click it and Unblock the Notifications








