டக்குனு ரூ.13,000 தள்ளுபடியை பெற்ற Xiaomi போன்; இன்ப அதிர்ச்சினா இதுதானா!

|

ரூ.500 முதல் ரூ.5,000 வரையிலான விலைக்குறைப்புகளை பார்த்து இருப்பீர்கள். ரூ.13,000 என்கிற இமாலய தள்ளுபடியை பார்த்து இருக்கிறீர்களா?

இல்லை என்றால், பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான Amazon India-விற்கு செல்லுங்கள். ஷாக் ஆகி விடுவீர்கள்! நீங்கள் மட்டும் அல்ல.. Xiaomi நிறுவனத்தின் குறிப்பிட்ட ஆபரை பார்த்து OnePlus மற்றும் iQOO நிறுவனங்களும் கூட மிரண்டு போய் உள்ளன!

ஏனென்றால்?

ஏனென்றால்?

அமேசானில் நடக்கும் சுதந்திர தின விற்பனையின் கீழ் ரூ.13,000 என்கிற தள்ளுபடியை பெற்றுள்ள சியோமி ஸ்மார்ட்போன் ஆனது, சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான லேட்டஸ்ட் ஒன்பிளஸ் மற்றும் ஐக்யூ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலைக்கு "சரிக்கு சமமாக இறங்கி வந்துள்ளது"!

3 மாசத்துக்கு முன்ன அறிமுகமான புத்தம் புது Phone மீது ரூ.4000 விலைக்குறைப்பு!3 மாசத்துக்கு முன்ன அறிமுகமான புத்தம் புது Phone மீது ரூ.4000 விலைக்குறைப்பு!

யாரு டூப்பு.. யாரு டாப்பு?

யாரு டூப்பு.. யாரு டாப்பு?

இதனால் "சுற்றி சுற்றி" இந்த மூன்று ஸ்மார்ட்போன்களின் விற்பனையுமே பாதிக்கப்படுமா? அல்லது ஏதாவது ஒரு ஸ்மார்ட்போன் மட்டும் விற்பனையில் தூள் கிளப்புமா? இந்த 3 ஸ்மார்ட்போன்களுமே ஒரே விலையில் வாங்க கிடைப்பதால், எதை வாங்குவது புத்திசாலித்தனம்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ரூ.13,000 தள்ளுபடியை பெற்றுள்ள அந்த Xiaomi ஸ்மார்ட்போன்?

ரூ.13,000 தள்ளுபடியை பெற்றுள்ள அந்த Xiaomi ஸ்மார்ட்போன்?

இந்திய சுதந்திர தினம் மற்றும் ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சியோமி நிறுவனம் அதன் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் ஆன Xiaomi 12 Pro மீது ரூ.13,000 என்கிற இமாலய தள்ளுபடியை அறிவித்துள்ளது.

அதாவது அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை 2022-யின் போது உங்களால் Xiaomi 12 Pro ஸ்மார்ட்போனை ரூ.49,999 க்கு சொந்தமாக்கி கொள்ள முடியும்.

அனைத்து வங்கி கார்டுகளின் மீதும் ரூ.6,000 ஆபர் கிடைக்கும்; எஸ்பிஐ கார்டுகளுக்கு ரூ.8,000 ஆபர் கிடைக்கும். உடன் ரூ.5,000 என்கிற உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். ஆக ஒருவரால் அதிகபட்சமாக ரூ.13,000 என்கிற தள்ளுபடியை பெற முடியும்.

வெறும் ரூ.999 & ரூ.844-க்கு இப்படியும் கூட Smart Watch கிடைக்குமா? நம்பவே முடியல!வெறும் ரூ.999 & ரூ.844-க்கு இப்படியும் கூட Smart Watch கிடைக்குமா? நம்பவே முடியல!

OnePlus 10T க்கு ஆப்பு.. iQOO 9T க்கு வேட்டு!

OnePlus 10T க்கு ஆப்பு.. iQOO 9T க்கு வேட்டு!

சில தினங்களுக்கு முன்னதாக இந்தியாவில் அறிமுகமான OnePlus 10T மற்றும் iQOO 9T ஆகிய இரண்டுமே ரூ.49,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், சியோமி நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ஆபர் ஆனது மேற்குறிப்பிட்ட 2 ஸ்மார்ட்போன்களின் விற்பனையையுமே பாதிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஏனெனில் ரூ.62,999 முதல் வாங்க கிடைத்த சியோமி 12 ப்ரோ, இப்போது ரூ.50,000 க்குள் வாங்க கிடைக்கும் போது, யார் தான் OnePlus 10T மற்றும் iQOO 9T பக்கம் செல்வார்கள்?

Xiaomi 12 Pro VS OnePlus 10T VS iQoo 9T - எதை வாங்கலாம்?

Xiaomi 12 Pro VS OnePlus 10T VS iQoo 9T - எதை வாங்கலாம்?

ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனில் நிறைகளை பற்றி பேசும் போது, இது சிறந்த ஸ்டோரேஜ், பெரிய பேட்டரி, நல்ல ஃபாஸ்ட் சார்ஜிங்கை வழங்குகிறது, முக்கியமாக சிக்கல் இல்லாத பரந்த விற்பனையின் கீழ் வாங்க கிடைக்கிறது.. குறைகளை பற்றி பேசும் போது - கொடுக்கும் விலைக்கு ஏற்ற கேமராக்கள் இதில் இல்லை என்றே கூறலாம்.

கீபோர்ட்ல இந்த ஷார்ட்கட்ஸ் கூட தெரியலனா.. ஆபீஸ்ல ரொம்ப அசிங்கமா போயிடும்!கீபோர்ட்ல இந்த ஷார்ட்கட்ஸ் கூட தெரியலனா.. ஆபீஸ்ல ரொம்ப அசிங்கமா போயிடும்!

ஐக்யூ 9டி ஸ்மார்ட்போனின் நிறை மற்றும் குறை?

ஐக்யூ 9டி ஸ்மார்ட்போனின் நிறை மற்றும் குறை?

மறுகையில் உள்ள ஐக்யூ 9டி ஸ்மார்ட்போனின் நிறைகளை பற்றி பேசும் போது, இதன் கேமராக்கள் அப்படியே ஒன்பிளஸ் 10டி மாடலுக்கு நேர் எதிர் - அட்டகாசமாக உள்ளன. மேலும் இது IP52 சான்றிதழ் உடன் வருகிறது. இதன் டிஸ்பிளே குவாலிட்டியும் தரமாக உள்ளது. குறைகளை பற்றி பேசும் போது, ஒன்பிளஸ் 10டி மாடலை போல இதை அவ்வளவு எளிதாக வாங்கி விட முடியாது; காத்திருக்க வேண்டி உள்ளது!

சியோமி 12 ப்ரோவின் நிறை மற்றும் குறை?

சியோமி 12 ப்ரோவின் நிறை மற்றும் குறை?

நிறை-குறைகளை பற்றி பேசும் முன், சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை நினைவுகூர்ந்து விடுவோம்.

இது 6.73-இன்ச் அளவிலான 2K LTPO E5 AMOLED டிஸ்ப்ளேவை (120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட், 1500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்) பேக் செய்கிறது. இது HDR10+ மற்றும் டால்பி விஷனையும் ஆதரிக்கிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் ஹோல் பஞ்ச் கட்-அவுட் டிசனையும் காண முடியும். இதன் டிஸ்பிளேவில் ஆப்டிகல் இன்-ஸ்கிரீன் ஃபிங்கர் பிரிண்ட் ரீடரும் அடக்கம்!

சுற்றி வளைக்காத 'ஓப்பன்' Review! Redmi K50i 5G போனை வாங்கலாமா?சுற்றி வளைக்காத 'ஓப்பன்' Review! Redmi K50i 5G போனை வாங்கலாமா?

கேமரா - வேற லெவல்!

கேமரா - வேற லெவல்!

Xiaomi 12 Pro ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் OIS மற்றும் f/1.9 லென்ஸ் உடனான 50MP மெயின் (Sony IMX 707) கேமரா + 115-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூவை வழங்கும் 50MP அல்ட்ராவைட்-ஆங்கிள் கேமரா + 50MP போர்ட்ரெய்ட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 32MP செல்பீ கேமரா உள்ளது.

பெர்ஃபார்மென்ஸ்-னு வந்தாலும் வெயிட்டு தான்!

பெர்ஃபார்மென்ஸ்-னு வந்தாலும் வெயிட்டு தான்!

ஏனெனில் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்பை பேக் செய்கிறது. இது 12GB வரையிலான LPDDR5 ரேம் மற்றும் 256GB வரையிலான UFS3.1 சேஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜை விரிவாக்க முடியாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 13 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 120W ஃபாஸ்ட் வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,600mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதில் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவும் உள்ளது.

இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!

Xiaomi 12 Pro-வின் நிறை மற்றும் குறை?

Xiaomi 12 Pro-வின் நிறை மற்றும் குறை?

டிஸ்பிளேவில் ஒரு குறையும் சொல்ல முடியாது. மேலும் இது கிளாஸ்-லீடிங் கேமரா செட்டப்பையும் பேக் செய்கிறது. ஃபாஸ்ட் சார்ஜிங்-ஐ பற்றி சொல்ல வேண்டும் என்றால் - சிம்ப்ளி சூப்பர்!

குறைகளை பற்றி பேசும் போது, இதில் முறையான IP மதிப்பீடு இல்லை. அதே போல இதன் பேட்டரி லைஃப் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். இதன் அல்ட்ராவைடு கேமராவில் ஆட்டோஃபோகஸ் இல்லை என்பதும் கூட ஒரு குறை தான்!

Photo Courtesy: Mi.com

Best Mobiles in India

English summary
Independence Day 2022 Mobile Phone Offer Xiaomi 12 Pro get Rs 13000 Discount on Amazon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X