புது Phone-களுக்கே இந்த நிலைமையா.. லேட்டஸ்ட் மாடல்களும் காலி.. ஜூன் மாதம் வரும் இந்த 7 போன்களும் அப்படி!
2023 மே மாதமானது போதும் போதுமென்று சொல்லுமளவிற்கு ஏராளமான புதிய போன்களின் அறிமுகத்தை கண்டது. கூகுள் பிக்சல் 7ஏ (Google Pixel 7a), போக்கோ எஃப்5 (Poco F5), ரெட்மி ஏ2 சீரீஸ் (Redmi A2 Series) என.. பல வகையான விலைப்பிரிவுகளின் கீழ் பல போன்கள் அறிமுகமாகின.
அதே போல 2023 ஜூன் (June) மாதமும் சில சிறந்த ஸ்மார்ட்போன்களின் (Best Smartphones) அறிமுகத்தை காண உள்ளது. எந்த அளவிலான பெஸ்ட் போன்கள் என்றால்.. லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஸ்மார்ட்போன்களை கூட ஓரங்கட்டும் அளவிற்கு சிறந்த போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

அப்படியாக ஒன்பிளஸ் (OnePlus), நத்திங் (Nothing), ரியல்மி (Realme) தொடங்கி சாம்சங் (Samsung), ஐக்யூ (iQOO), மோட்டோரோலா (Motorola) வரையிலாக ஜூன் 2023 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படும் 7 ஸ்மார்ட்போன்களின் (7 Most Anticipated Phones) பட்டியல் இதோ:
01. ஒன்பிளஸ் நோர்ட் 3 (Oneplus Nord 3): இது ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸின் கீழ் அறிமுகமாகும் புதிய மிட்ரேன்ஜ் விலை போனாக இருக்கும். இது சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற தேதி இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் எப்படியும் இது ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனானது 6.74 இன்ச் டிஸ்பிளே, டைமன்சிட்டி 9000 சிப்செட் (Dimensity 9000 Chipset), ஐஓஎஸ் (OIS) ஆதரவுடனான 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 + 8எம்பி அல்ட்ரா வைட் + 2எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா போன்ற அம்சங்களை பேக் செய்யலாம். இதன் விலை நிர்ணயம் ரூ.30,000 - ரூ.32,000 க்குள் இருக்கலாம்.
02. நத்திங் போன் 2 (Nothing Phone 2): மிகவும் எதிர்பார்க்கப்படும் மிட்ரேன்ஜ் போன்களில் ஒன்றாக மாறியுள்ள நத்திங் போன் 2-வில் னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் (Snapdrogan 8+ Gen 1 Chipset), 4700mAh பேட்டரி போன்ற அம்சங்கள் இடம்பெறுமென்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டன. இது ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
03. சாம்சங் கேலக்ஸி எஃப்54 5ஜி (Samsung Galaxy F54 5G): ஜூன் 2023ல் அறிமுகமாகும் இன்னொரு மிட்ரேன்ஜ் மாடலாக சாம்சங் கேலக்ஸி எஃப்54 இருக்கும். சுமார் ரூ.35,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங்கின் சக்திவாய்ந்த எக்ஸினோஸ் 1380 சிபியு-வை (Exynos 1380 CPU) பேக் செய்யலாம்.
மேலும் இது 8ஜி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 108எம்பி மெயின் சென்சார், 8எம்பி அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 2எம்பி மேக்ரோ அல்லது டெப்த் சென்சாரை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 6.7-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே, 6000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கலாம்.
04 & 05. ரியல்மி 11 ப்ரோ 5ஜி சீரீஸ் (Realme 11 Pro 5G Series): ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகிவிட்ட ரியல்மி 11 ப்ரோ (Realme 11 Pro) மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் (Realme 11 Pro Plus) ஸ்மார்ட்போன்கள் இந்த ஜூன் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
இவ்விரு போன்களுமே 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு டிஸ்பிளே, ஆக்டாகோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் (Dimensity 7050 Chipset), 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளன. ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களுக்கு இடையேயான வேறுபாடுகள் கேமராக்கள் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் திறனில் காணப்படும்.
06. ஐக்யூ நியோ 7 ப்ரோ (iQOO Neo 7 Pro): ஜூன் மாதத்தில் ஐக்யூ நியோ 7 ப்ரோவும் இந்திய சந்தைக்கு வரும். இது ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் (Snapdragon 8+ Gen 1 SoC) மூலம் இயக்கப்படுமென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக இது 120W ராப்பிட் சார்ஜிங்கிற்கான (Rapid Charging) ஆதரவுடனும் வரலாம்.
07. மோட்டோரோலா எக்ஸ்40 (Motorola X40): இது வரும் வாரங்களில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Snapdragon 8 Gen 2 Chipset), 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் டிஸ்பிளே, இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், ஐபி68 ரேட்டிங் போன்ற அம்சங்களை பேக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








