Home
Mobile

இன்ச் பை இன்ச்.. டிஸ்பிளே முதல் பேட்டரி வரை.. டாப் கிளாஸ் அம்சங்களுடன் Realme GT Neo 5 SE ஸ்மார்ட்போன்!

பொதுவாக ஒரு ஸ்மார்ட்போனில் ஏதாவது ஒரு டிபார்ட்மென்ட்டில் தான்.. அதாவது டிஸ்பிளேவிலோ, கேமராவிலோ அல்லது சிப்செட்டிலோ தான் வெயிட்டான அம்சங்கள் பேக் செய்யப்படும். ஆனால் வருகிற ஏப்ரல் 3 ஆம் தேதி அறிமுகமாகும் ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ (Realme GT Neo 5 SE) உண்மையிலேயே ஒரு விதிவிலக்காகும்!

ஏனென்றால், இது இன்ச் பை இன்ச்.. டிஸ்பிளே முதல் பேட்டரி வரை.. டாப் கிளாஸ் அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5,500mAh பேட்டரியுடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடவே இது 1.4கே ரெசல்யூஷன் மற்றும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை (144Hz Refresh Rate) ஆதரிக்கும் டிஸ்ப்ளேவை பேக் செய்யும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

டாப் கிளாஸ் அம்சங்களுடன் Realme GT Neo 5 SE ஸ்மார்ட்போன்!

கூடுதலாக, இந்த லேட்டஸ்ட் ரியல்மி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 2 (Qualcomm Snapdragon 7+ Gen 2) ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் என்பதும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை ஸ்டோரேஜுடன் வருமென்றும் கூறப்படுகிறது. கடைசியாக இதில் 64எம்பி ஆம்னிவிஷன் (64MP OmniVision) மெயின் கேமராவும் இடம்பெறலாம்!

இப்படியாக ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ ஸ்மார்ட்போனானது தரமான டிஸ்பிளே, வேகமான ஃபாஸ்ட் சார்ஜிங், பெரிய பேட்டரி, செயல்திறன்மிக்க சிப்செட், போதும் போதும் அளவிற்கு ரேம் மற்றும் ஸ்டோரேஜ், நல்ல மெயின் கேமரா என.. கிட்டத்தட்ட எல்லா துறைகளிலுமே சிறப்பாக செயல்படும் முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.4கே ரெசல்யூஷன் மட்டுமின்றி, 1240 x 2772 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (PWM dimming) போன்றவைகளும் இருக்கும். மேலும் அதுவொரு 6.74-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் எப்/1.79 லென்ஸ் உடனான 64 மெகாபிக்சல் ஆம்னிவிஷன் மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) அல்ட்ரா-வைட் கேமரா + 2 மெகாபிக்சல் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். முன்பக்கத்தில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறுமென்று ஊகிக்கப்படுகிறது.

விலை மற்றும் விற்பனை: வருகிற ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு சீனாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் மற்றும் விற்பனை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் இது இந்திய மதிப்பின்படி ரூ.30,000 பட்ஜெட்டில், இன்னும் குறிப்பிட்டு சொன்னால் ரூ.26,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, சமீபத்தில் தான் ரியல்மி சி55 (Realme C55) என்கிற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது, இது 4ஜிபி + 64ஜிபி, 6ஜிபி + 64ஜிபி மற்றும் 8ஜிபி + 128ஜிபி என்கிற 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் முறையே ரூ.10,999. ரூ.11,999 மற்றும் ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Inch By Inch Powerful Specifications Realme GT Neo 5 SE All Set To Launch On April 3
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X