Home
Mobile

வுட்றா வண்டிய.. எந்த நாட்டில் வாங்கினால் Apple-ன் புதிய iPhone 16e ரொம்ப Cheap ஆன விலைக்கு கிடைக்கும்?

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன் 16இ (iPhone 16e) மாடலானது இந்தியா உட்பட உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுவாரசியமாக அமெரிக்கா மற்றும் ஜப்பானில் ஐபோன் 16இ மாடலின் விலை இந்திய விலையை விட குறைவானதாகவும்.. அதே சமயம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் யுகே-வில் இந்திய விலையை விட அதிகமான விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 16இ - எந்தெந்த நாடுகளில் என்ன விலை? இந்தியாவில் ஐபோன் 16இ மாடலின் பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,900 க்கும் மற்றும் ஹை-எண்ட் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எந்த நாட்டில் வாங்கினால் iPhone 16e Cheap ஆன விலைக்கு கிடைக்கும்?

ஆனால் அமெரிக்காவில் ஐபோன் 16இ மாடலின் பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் 599 அமெரிக்க டாலர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.51,970 ஆகும். ஆக அமெரிக்காவில் ஐபோன் 16இ மாடலை வாங்குபவர்கள், இந்தியாவில் வாங்க கிடைப்பதை விட மலிவான விலைக்கு இதை வாங்கலாம்.

இதேபோல யுனைடெட் கிங்டம்மில் (யுகே) ஐபோன் 16இ மாடலின் 128 ஜிபி ஆப்ஷனின் விலை £599 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.65,460 ஆகும். அதாவது யுகே விலை நிர்ணயம் ஆனது இந்தியாவை விட சற்று அதிகமாக உள்ளது.

ஜப்பானில், ஐபோன் 16இ மாடலின் விலை 99,800 யென்களாக உள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.57,599 ஆகும். ஆகா ஜப்பானில் ஐபோன் 16இ மாடல் ஆனது இந்தியாவில் வாங்க கிடைப்பதை விட மலிவான விலைக்கு கிடைக்கிறது. இயற்பினும் அமெரிக்கா அளவிற்கு மிகவும் மலிவான விலைக்கு விற்பனை செய்யவில்லை.

கடைசியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில், ஐபோன் 16இ மாடலின் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை AED 2,599 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ. 61,470 ஆகும். ஆக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்தையிலும் ஐபோன் 16இ மாடலின் விலை இந்திய விலையை விட சற்றே அதிகமாக இருக்கிறது.

விற்பனையை பொறுத்தவரை ஐபோன் 16இ மாடலின் ப்ரீ-ஆர்டர் பிப்ரவரி 21 முதல் தொடங்கும் என்றும், பிப்ரவரி 28 முதல் டெலிவரி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது ஃபேஸ் ஐடி உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கேமராவை ஸ்டார்ட் செய்வது அல்லது டிஎன்டி மோட்-ஐ ஆன் செய்வது போன்ற பல்வேறு செயல்பாடுகளை விரைவாக அணுக உதவும் ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளார்

ஐபோன் 16இ மாடல் ஆனது ஆப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது ஏஐ அம்சங்களின் தொகுப்பான ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-ஐ ஆதரிக்கிறது. ஜென்மோஜி, ரைட்டிங் டூல்ஸ் மற்றும் சாட்ஜிபிடி உடனான ஒருங்கிணைப்பு போன்ற டூல்கள் இதில் அடங்கும், இது பல்வேறு ஆப்களில் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும்

கேமராக்களை பொறுத்தவரை ஐபோன் 16இ மாடலானது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது, இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. இதன் கேமரா செட்டப்பில் போர்ட்ரெய்ட் மோட், நைட் மோட் மற்றும் எச்டிஆர் ஆகிய அம்சங்கள் உள்ளன.

முன்பக்கத்தில் ஐபோன் 16இ மாடலில் ஆட்டோஃபோகஸுடன் 12எம்பி ட்ரூ டெப்த் கேமரா உள்ளது. வீடியோ ரெக்கார்டிங்கை பொறுத்தவரை, ஐபோன் 16இ மாடல் ஆனது 4கே ரெக்கார்டிங்கை வினாடிக்கு 60 பிரேம்கள் வரை ஆதரிக்கிறது. இதிலுள்ள டால்பி விஷன் ஆனது மேம்பட்ட கலர்கள் மற்றும் காண்ட்ராஸ்ட் உடன் உயர்தர வீடியோவை ரெக்கார்ட் செய்ய அனுமதிக்கிறது.

இது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது என்று ஆப்பிள் கூறுகிறது. இந்த மாடல் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் சேட்டிலைட் வழியாக மெசேஜ்கள் மற்றும் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ்-களை அனுப்ப உதவும் செயற்கைக்கோள் இணைப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. கடைசியாக கடுமையான விபத்து ஏற்பட்டால் அவசர சேவைகளுக்கு தானாகவே எச்சரிக்கை செய்யும் க்ராஷ் டிடெக்ஷன் ஆதரவும் இதில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
In Which Country iPhone 16e Price is Cheaper Than India compared to US UK UAE Japan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X