ஆடு திருடு போவதை தடுக்கும் மொபைல்போன்கள்!

Posted By: Karthikeyan
ஆடு திருடு போவதை தடுக்கும் மொபைல்போன்கள்!

ஆடுகள் காணாமல் போவதை தடுப்பதற்கா தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர் ஆடுகளின் கழுத்தில் மொபைல் போன்களை கட்டி வைத்திருக்கிறார்.

யாராவது ஆடுகளை திருட வரும்போது ஆடுகள் ஓட்டம் பிடிக்கும். அப்போது ஏற்படும் அதிர்வுகளை வைத்து மொபைல்போன் தானாக அவரது மொபைல்போனுக்கு அழைப்பு வருவது போல மொபைல்போன்களில் செட்டிங் செய்துள்ளார். ஆடு 1, ஆடு 2 என 4 மந்தைகளில் உள்ள 4 ஆடுகளின் கழுத்தில் மொபைல்போன்களை கட்டியுள்ளார். ஒவ்வொரு மந்தையிலுள்ள ஆட்டிற்கும் அவர் குறியீட்டு எண்ணையும் வைத்திருக்கிறார்.

எனவே திருடன் எந்த மந்தையில் திருட வந்திருக்கிறான் என எளிதாக கண்டுபிடித்து விடமுடியும். மேலும் அவருடைய ஆடுகள் 750 ஹெக்டேர் அதாவது 1,850 ஏக்கர் நிலப்பரப்பில் மேய்வதால் கண்காணிப்பது சிரமம். இதற்காகத்தான் இப்படியொரு ஐடியாவை அவர் செய்திருக்கிறார்.

சமீபத்தில் அவருடைய 27 வெள்ளாடுகள் மற்றும் 13 செம்மறி ஆடுகள் காணாமல் போனதால் இப்படியொரு அருமையான ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். மேலும், மொபைல்போனை வைத்தே ஆடுகளை அவர் எளிதாக தேட முடியும் என்று கூறியுள்ளார். புதிய தொழில் நுட்பங்கள் மூலம் விலங்குகளை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.

இவ்வாறு ஆடுகள் திருடப்படும் போது காவல் துறையை அழைப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை என்கிறார். ஏனெனில் காவல் நிலையங்கள் வெகு தூரத்தில் இருப்பதால் அவசர நேரத்தில் அவர்களால் வரமுடியாது என்று கூறுகிறார்.

அதனால் மொபைல் போன்கள் ஆடுகளைத் திருட்டிலிருந்து காப்பாற்றும் என்று அவர் நம்புகிறார். அப்படியிருந்தும் சமீபத்தில் ஒரு இரவில் அவருடைய ஆடுகளைத் திருடர்கள் திருட முயற்சி செய்திருக்கின்றனர். அப்போது மொபைல் அழைத்திருக்கிறது. அவர் ஆடுகளைத் தேடி ஓடியிருக்கிறார். அதற்குள் அவர்கள் ஒரு சில ஆடுகளைத் திருடிச் சென்றுவிட்டனர். ஆனாலும் மொபைல் கொடுத்த எச்சரிக்கை பல ஆடுகளைக் காப்பாற்றியிருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot